Close Menu
    What's Hot

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    20-30 வயது இளைஞர்களிடையே அதிகரிக்கும் மூட்டு வலி!. என்ன காரணம்?. தடுப்பது எப்படி?

    ஷாக்!. முத்தம் கொடுப்பதன்மூலம் பரவிய வைரஸ்!. கண் பார்வையை இழந்த குழந்தை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – நீதிமன்றம் வேதனை
    தமிழ்நாடு

    தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – நீதிமன்றம் வேதனை

    Editor TN TalksBy Editor TN TalksAugust 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG Madras High Court Bu 2 1 HEDS3NUB
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கடலூர் கல்லூரி மாணவர் மரணம் குறித்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெயசூர்யா, கடந்த மே மாதம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலை விபத்தில் மரணமடைந்தார். இந்நிலையில், தனது மகன் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால், வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி, மாணவரின் தந்தை எம்.முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

    அதில், கல்லூரியில் உடன் படித்த மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த மாணவியை காதலித்ததால், அந்த மாணவியின் உறவிர்கள், அடிக்கடி தனது மகனை மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், ஆணவக் கொலை என்ற சந்தேகம் உள்ளதால் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

    வழக்கு தொடர்பான ஆவணங்களை இரண்டு வாரங்களில் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கும்படி, குள்ளஞ்சாவடி காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, சிபிசிஐடி நியாயமாக விசாரணை நடத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் ஆணவக்கொலை அதிகரித்துள்ளதாக கூறிய நீதிபதி, துரதிருஷ்டவசமாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். ஆணவக்கொலை அதிகரித்து வந்தாலும் உண்மை வெளியில் வருவதில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு திட்டங்களில் முதலமைச்சர் பெயர் பயன்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு
    Next Article நடிகை மீரா மிதுனை கைது செய்ய உத்தரவு
    Editor TN Talks

    Related Posts

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    February 19, 2026

    குட்நியூஸ்!. இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு தொகை!. அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

    February 19, 2026

    நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    February 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    20-30 வயது இளைஞர்களிடையே அதிகரிக்கும் மூட்டு வலி!. என்ன காரணம்?. தடுப்பது எப்படி?

    ஷாக்!. முத்தம் கொடுப்பதன்மூலம் பரவிய வைரஸ்!. கண் பார்வையை இழந்த குழந்தை!

    விஜய் தேவரகொண்டா–ராஷ்மிகா திருமணம்!. பங்கேற்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடு!

    எப்ஸ்டீன் சர்ச்சை!. பிரிட்டன் முன்னாள் இளவரசர் அதிரடி கைது!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.