Close Menu
    What's Hot

    தேர்தல் தேதி அறிவித்தவுடன் அமலாகும் நடத்தை விதிகள்!. என்னென்ன தெரியுமா?

    தமிழகமே அதிர்ச்சி!. பட்டப் பகலில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்!. நெல்லை பஸ் ஸ்டாண்டில் பகீர்!

    வெளியுறவுக் கொள்கையிலும் பாஜக அரசின் ‘தோல்வி மாடல்’!. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறாரா வேல்முருகன்? கடைசி நேரத்தில் ஷாக்!
    தமிழ்நாடு

    திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறாரா வேல்முருகன்? கடைசி நேரத்தில் ஷாக்!

    Editor web3By Editor web3March 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    velmurugan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகள் நாளுக்கு நாள் பரபரப்படைந்து வரும் நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்  வேல்முருகன் அதிரடி முடிவு எடுக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியபோது, தவாக கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கையை ஒதுக்க திமுக தலைமை தயக்கம் காட்டியதாகக் கூறப்படுகிறது. அதாவது தவாக 3 தொகுதிகள் கேட்ட நிலையில், திமுகவோ ஒரு தொகுதிதான் தர முடியும் என்றும் அதிகும் உதயசூரியன் சின்னத்திலேயே நிற்க வேண்டும் எனவும் கறாராக கூறிவிட்டதாம். இந்த இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேல்முருகன் தரப்பு ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

    இந்தச் சூழலில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அவசர உயர்மட்டக் குழு கூட்டம் இன்று (மார்ச் 15) சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது வெளியேறி அதிமுகவுடன் கைகோர்ப்பதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. அதிமுக தரப்பில் தவாக-வுக்குக் கௌரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளதால், இன்றைய கூட்டத்திற்குப் பிறகு வேல்முருகன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், வன்னியர் சமூக வாக்குகளைக் குறிவைத்து வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியையும் இணைத்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக, வடதமிழகத்தில் தவாக-வுக்கு இருக்கும் செல்வாக்கை கைப்பற்ற அதிமுக திட்டமிடுகிறது. ஒருவேளை தவாக வெளியேறினால், அது திமுக கூட்டணிக்கு வடமாவட்டங்களில் ஒரு பின்னடைவாக அமையலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉலகப்போர் அபாயம்!. ஹார்முஸ் ஜலசந்திக்கு போர்க்கப்பல்களை அனுப்புங்கள்!. உலக நாடுகளுக்கு டிரம்ப் அதிரடி உத்தரவு!.
    Next Article இனி ஒரே ஒரு லட்டுதான்!. ஷீரடி சாய்பாபா கோவிலில் பிரசாத விநியோகத்தை பாதித்த எல்பிஜி நெருக்கடி!
    Editor web3
    • Website

    Related Posts

    தேர்தல் தேதி அறிவித்தவுடன் அமலாகும் நடத்தை விதிகள்!. என்னென்ன தெரியுமா?

    March 15, 2026

    தமிழகமே அதிர்ச்சி!. பட்டப் பகலில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்!. நெல்லை பஸ் ஸ்டாண்டில் பகீர்!

    March 15, 2026

    வெளியுறவுக் கொள்கையிலும் பாஜக அரசின் ‘தோல்வி மாடல்’!. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!.

    March 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்தல் தேதி அறிவித்தவுடன் அமலாகும் நடத்தை விதிகள்!. என்னென்ன தெரியுமா?

    தமிழகமே அதிர்ச்சி!. பட்டப் பகலில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்!. நெல்லை பஸ் ஸ்டாண்டில் பகீர்!

    வெளியுறவுக் கொள்கையிலும் பாஜக அரசின் ‘தோல்வி மாடல்’!. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!.

    இனி ஒரே ஒரு லட்டுதான்!. ஷீரடி சாய்பாபா கோவிலில் பிரசாத விநியோகத்தை பாதித்த எல்பிஜி நெருக்கடி!

    திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறாரா வேல்முருகன்? கடைசி நேரத்தில் ஷாக்!

    Trending Posts

    உலகப்போர் அபாயம்!. ஹார்முஸ் ஜலசந்திக்கு போர்க்கப்பல்களை அனுப்புங்கள்!. உலக நாடுகளுக்கு டிரம்ப் அதிரடி உத்தரவு!.

    March 15, 2026

    விஜய்க்கு 80 சீட்?. மறுக்கும் இபிஎஸ்!. தீவிரம் காட்டும் டெல்லி பாஜக!. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்!

    March 15, 2026

    தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்!. இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேதி?

    March 15, 2026

    தவெக – பாஜக கூட்டணி?. மும்பை டூ டெல்லி!. நடிகை த்ரிஷா நடத்திய ரகசிய மூவ்? பரபரக்கும் தமிழக அரசியல்!.

    March 15, 2026

    வெளியுறவுக் கொள்கையிலும் பாஜக அரசின் ‘தோல்வி மாடல்’!. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!.

    March 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.