பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு அம்பலப்படுத்தவும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ போன்ற இந்தியாவின் தற்காப்பு உரிமையை எடுத்துரைக்கவும் சர்வதேச நாடுகளுக்குச் சென்றுள்ள இந்தியப் பிரதிநிதிகள் குழுவில், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவும் ஒன்று.
ரஷ்யா, ஸ்லோவேனியா, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் தங்கள் பணிகளை முடித்துக் கொண்டு, கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் பிரதிநிதிக் குழு தற்போது லாட்வியா தலைநகர் ரிகாவை அடைந்துள்ளது. அங்கு இந்தியத் தூதர் நம்ரதா குமார் இக்குழுவை வரவேற்றார்.
வரவேற்பைத் தொடர்ந்து, கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு, ரிகாவில் உள்ள தேசிய நூலகத்தில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.