அமித் ஷா இல்லை, ஷா, ஷூ யார் வந்தாலும் தமிழ்நாட்டில் ஒத்த சீட் கூட வாங்க முடியாது எனவும் அதனால் தான் அதிமுகவுடன் வருகின்றனர்; அதிமுகவும் ஒத்த சீட் வாங்க முடியாது எனவும் திராவிட கழக துணை பொது செயலாளர் மதிவதனி தெரிவித்துள்ளார். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் நடைபெற்ற கலைஞரின் 102-வது பிறந்த நாள் விழா பொது கூட்டத்தில் பேசிய போது இவ்வாறு தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியில் கலைஞரின் 102-வது பிறந்த நாள் விழா பொது கூட்டம் மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் தலைமையில் நடைபெற்றது. இதில் வழக்கறிஞரும், திராவிட கழக துணை பொது செயலாளருமான மதிவதனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர்,
இளைஞர்களை ஏமாற்ற புள்ள பிடிக்குற கூட்டம் மாதிரி, ஏமாற்றி, பொய் சொல்லி, டேன்ஸ் ஆடி, பாட்டுப்பாடி ஒரு பக்கம், இன்னொரு பக்கம் வாயை திறந்தால் பொய் மட்டும் பேசும் கூட்டம்; இன்னொரு பக்கம் இளைஞர்களை வெளிப்படையாக கலவரத்திற்கு அழைக்கிறார்கள் எனவும்,
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கேட்ட போது பக்கோடா போட சொன்னவர் மோடி எனவும்,
அமித் ஷா இல்லை, ஷா, ஷூ யார் வந்தாலும் தமிழ்தாட்டில் ஒத்த சீட் கூட வாங்க முடியாது எனவும்,அதனால் தான் அதிமுகவுடன் வருகின்றனர் எனவும், அதிமுகவும் ஒத்த சீட் வாங்க முடியாது எனவும்,வேலை வாய்ப்பு குறித்து அமித் ஷாவிடம் கேட்டால் ஜும்கா, அதாவது சும்மா சொன்னேன் என சொன்னாராம் எனவும் கூறினார்.
இந்தியாவில் உற்பத்தி துறையில் முதல் மாநிலம் தமிழ்நாடு எனவும்,10 ஆண்டுகளில் உற்பத்தி துறையில் மோடி எதுவும் செய்யவில்லை; 10 ஆண்டுகளில் உற்பத்தி சதவீதம் 16% மட்டுமே, ஆனால், 4 ஆண்டுகளில் உற்பத்தி துறையில் தமிழ்நாடு 25% எனவும் கூறினார்.
மோடி வெளிநாடுகளுக்கு போவது சுற்றுப்பயணம் மட்டுமே எனவும், தமிழக முதல்வர் சுற்றுப்பயணம் செல்வது தொழில்களை ஈர்த்து முதலீடு செய்ய வைப்பதற்கு எனவும்,
இந்தியாவில் 9.1% பொருளாதார வளர்ச்சி கொண்ட மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான் எனவும் கூறினார்.
அதிமுக,பாஜக, புதியதாக கட்சி ஆரம்பிப்பவர்கள் என அனைவரும் ஆர்எஸ்எஸ்-இன் கொள்கையை நிறைவேற்றுவதும் தமிழ்நாட்டை நாசமாக்குவதும் தான் அவர்களது வேலை எனவும்,
திமுகவை தோற்கடிப்பது என்பது திமுகவின் திட்டங்களை தோற்கடிப்பது என்பதே எனவும் அவர் கூறினார்.
இந்த பொது கூட்டத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை, பெண்களுக்கு தையல் மெஷன், தள்ளு வண்டி ஆகியவற்றை மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் வழங்கினார்.