Close Menu
    What's Hot

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    20-30 வயது இளைஞர்களிடையே அதிகரிக்கும் மூட்டு வலி!. என்ன காரணம்?. தடுப்பது எப்படி?

    ஷாக்!. முத்தம் கொடுப்பதன்மூலம் பரவிய வைரஸ்!. கண் பார்வையை இழந்த குழந்தை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கார்த்திகை தீபத் திருவிழா: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
    தமிழ்நாடு

    கார்த்திகை தீபத் திருவிழா: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 17, 2025Updated:November 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Karthigai Deepam festival
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய  கோரிய மனுவுக்கு நவம்பர் 24ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு, அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என்பதால், நெரிசல் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், போதுமான  அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், கூட்டத்தை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் போதுமான காவல்துறையினரை பணியில் அமர்த்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கூட்டத்தை கண்காணிக்க வேண்டும், வாகன போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும், வாகனம் நிறுத்துவதற்கு போதுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், மருத்துவ வசதிகள் வழங்க தற்காலிக முகாம்கள் அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதேபோல கிரிவலப்பாதையில் போலி சாமியார்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளை அனுமதிக்கக் கூடாது என்றும், கடைகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

    கோயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கைத் தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, தமிழக அரசு, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகியோர் நவம்பர் 24ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசுப்மன் கில் டிஸ்சார்ஜ்! ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை
    Next Article பெருமழை அச்சம்; முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்
    Editor TN Talks

    Related Posts

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    February 19, 2026

    குட்நியூஸ்!. இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு தொகை!. அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

    February 19, 2026

    நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    February 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    20-30 வயது இளைஞர்களிடையே அதிகரிக்கும் மூட்டு வலி!. என்ன காரணம்?. தடுப்பது எப்படி?

    ஷாக்!. முத்தம் கொடுப்பதன்மூலம் பரவிய வைரஸ்!. கண் பார்வையை இழந்த குழந்தை!

    விஜய் தேவரகொண்டா–ராஷ்மிகா திருமணம்!. பங்கேற்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடு!

    எப்ஸ்டீன் சர்ச்சை!. பிரிட்டன் முன்னாள் இளவரசர் அதிரடி கைது!

    Trending Posts

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    February 19, 2026

    20-30 வயது இளைஞர்களிடையே அதிகரிக்கும் மூட்டு வலி!. என்ன காரணம்?. தடுப்பது எப்படி?

    February 19, 2026

    ஷாக்!. முத்தம் கொடுப்பதன்மூலம் பரவிய வைரஸ்!. கண் பார்வையை இழந்த குழந்தை!

    February 19, 2026

    விஜய் தேவரகொண்டா–ராஷ்மிகா திருமணம்!. பங்கேற்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடு!

    February 19, 2026

    எப்ஸ்டீன் சர்ச்சை!. பிரிட்டன் முன்னாள் இளவரசர் அதிரடி கைது!

    February 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.