சென்னை மாநகராட்சியில் 1.80லட்சத்திற்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றனர். நாள்தோறும் இந்த தெருநாய்கள் சாலையில் விளையாடும் சிறுவர்கள் முதல் நடமாடும் முதியவர்கள் வரை கடித்து காயம் ஏற்படுத்துகிறது. இதனை தடுக்கும் பொருட்டு சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதேப் போல சென்னை மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளாலும், நாள்தோறும் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். சாலையில் நடந்து செல்பவர்களை சில நேரம் முட்டி விடுவதாலும், சாலையின் குறுக்கே திடீரென செல்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.

அந்த வகையில், சென்னை திருவொற்றியூர் பெரியார் நகர் பழைய கிணறு தெருவை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவர் மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இரவு 8 மணிக்கு பணியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில்வீடு திரும்பும் போது, மணலி எம் ஜி ஆர் நகர் அருகில் சாலையில் குறுக்கே வந்த எருமை மாடு அவரது வாகனத்தின் மீது இடித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version