[9:49 PM, 6/7/2025] +91 90432 00200: போடி பகுதியில் மாம்பழத்திற்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி,
தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுற்றுப்பகுதிகளில் சுமார் 20,000 ஏக்கருக்கும் மேல் மாங்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது.
காதர், இமாம்பசந்த், சப்பட்டை, கிளி மூக்கு, மல்கோவா, செந்தூரம், போன்ற உயர்ரக மாம்பழங்கள் அதிகம் இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ளது .
இந்த ஆண்டு மாங்காய் விலை போடிநாயக்கனூர் சுற்றுப்பகுதிகளில் கடும் விலை வீழ்ச்சி கண்டுள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர்.
கடந்த ஆண்டு கிலோ 12 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட கல்லாமை மாங்காய் தற்போது கிலோ நான்கு ரூபாய்க்கு கேட்கப்படும் நிலையில், உயர் ரக ஏற்றுமதி ரக மாம்பழங்கள் கேட்க வழியின்றி அழுகி கீழே கொட்டப்படும் நிலையில் உள்ளது.
இதனால் மாங்காய் உற்பத்தி விவசாயத்தில் பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறித்து விவசாயிகள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இன்று போடிநாயக்கனூர் வள்ளுவர் சிலை அருகில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும், மாங்காய்களுக்கு தமிழக அரசு தர விலை நிர்ணயம் செய்யக் கோரியும்,போடிநாயக்கனூர் பகுதியில் மாம்பழக் கூழ் தொழிற்சாலை ஏற்படுத்தி தரக் கோரியும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏற்றுமதி ரக மாங்காய்களுக்கு டன் ஒன்றுக்கு ரூபாய் 12,000 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், மாம்பழக் கூல் தொழிற்சாலையை உருவாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பாதிப்பின் தன்மைக்கு ஏற்றவாறு உரிய இழப்பீடு உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.
மேலும் தனியார் நிறுவன மருந்துகளை பயன்படுத்துவதால் மாங்காய்களில் புழுக்கள் தோன்றுவதாகவும்,அதை தவிர்க்க மீண்டும் மருந்துகள் பயன்படுத்த வேண்டிய சூழலில் உள்ளதாகவும், தமிழக அரசு இதுகுறித்து விவசாயத் துறை சார்பாக ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
[9:50 PM, 6/7/2025] +91 90432 00200: தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கஞ்சா வாங்கி கம்பம்மெட்டு வழியாக கடத்தி வந்த குமுளியை சேர்ந்த 18 வயது நிரம்பிய இரு இளைஞர்கள் இடுக்கி கலால் துறையின் பறக்கும் படையினரால் கைது செய்யப்பட்டு தொடுபுழா சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழக -கேரள எல்லையை இணைக்கும் கேரள மாநிலம் இடுக்கி அடிமாலி கலால் துறையின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பறக்கும் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி கோதமங்கலத்தில் இருந்து குமுளி வந்த தனியார் பேருந்தை அடிமாலியில் சோதனையிட்டனர்.
அப்போது பேருந்தில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு கிலோ கஞ்சா வை இளைஞர்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த இரு இளைஞர்களையும் போலீசார் கைது செய்து,அவர்கள் வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் குமுளி பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய அப்சல் மற்றும் ஆஷிக் என்பதும், சில்லரை விற்பனைக்காக தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கஞ்சா வாங்கி கம்பம்மெட்டு வழியாக கடத்தியதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை தொடுபுலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்..