மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நீர்வளத்துறை அமைச்சரும்  திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன், இப்படிப்பட்ட தீர்மானங்கள் பலமுறை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது என்றும் கூறியுள்ளார்.

” அவர்களுக்கு எப்போது வெள்ளம் வருகிறதோ அப்போதுதான் அணையை திறப்பார்கள். அதுவரை தமிழ்நாடு பாலைவனமாகும். ஆகையால் தீர்மானம் மட்டும் போதாது. தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறது என்பதை உணர்த்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தில் சரியான வழக்கறிஞர்களை வைத்து முறையாக வாதாட வேண்டும்” என குறித்து காட்பாடியில்  இன்று செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன் தெரிவித்தார்.

” கர்நாடகாவுக்கும் நமக்கும் எவ்வளவு பேசினாலும் அவர்கள் மேகதாதுவில் அணையைக் கட்ட வேண்டும் என்று தான் பேசுவார்கள். நான் கிருஷ்ணா முதல் கொண்டு 6,7 முதலமைச்சர்களிடமும் பேசிய உள்ளேன். தலைவர் கலைஞர் அவர்களும் பேசியிருக்கிறார். ஆகையால் எல்லோரும் ஒரே மாதிரி தான் பேசுவார்கள். ஆகையால் அணையைக் கட்டினால் இப்போது வருகிற தண்ணீர் கூட வராது. அணை கட்டினால் அணை நிரம்பி வெளியேறும் நீர் மட்டுமே நமக்கு வரும். இவர்கள் திருப்திகரமாக எப்போது திறப்பார்கள் என்று கேட்டால் அவர்களுக்கு எப்போது வெள்ளம் வருகிறதோ அப்போதுதான் திறப்பார்கள்.

கர்நாடகா திட்டம் போட்டு மத்திய அரசிற்கு அனுப்புவது இது முதல் முறை அல்ல. இரண்டு, மூன்று முறை பிளான் போட்டு மத்திய நீர்வளத் துறைக்கு அனுப்பினார்கள். ஆகையால் தீர்மானம் போட்டு வந்தாலும் கர்நாடகா  ஆறு ஏழு கட்டங்களை தாண்டி வர வேண்டும். அதற்குள் அதனை தடுக்க வேண்டும்.ஆகையால் ஒரு ஆர்வத்தோடு புதிதாக வந்திருக்கிற என்னுடைய மதிப்புக்குரிய நண்பர் சிவகுமார் இதிலே முந்தி இருக்கிறார். பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது சரியானது அல்ல. கோர்ட் முடிவுக்கு பிறகு எப்படி பேச்சு வார்த்தை நடத்த முடியும்.ஆகையால் பேச்சு வார்த்தைக்கு ஈடுபட்டால் நமக்கு இழப்பு தான் ஏற்படும்.

ஒரு முறை இல்ல 36 ,37 முறை நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம்” என துரைமுருகன் மேலும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version