11 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகில் விஜயமங்கலத்தில் வேளான் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார்
12 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் ஆணையை பாசன வசதிக்காக திறந்து வைக்கிறார்
சட்டமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கள ஆய்வு மற்றும் புதிய திட்டங்களை துவக்கி வைத்து வருகிறார். அந்த வகையில் வரும் 11, 12 ஆகிய தேதியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சேலம் மற்றும் ஈரோடு சென்று பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார்.
இதற்காக 11 ஆம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக திருப்பூர் செல்கிறார் திமுக பிரமுகர் இல்ல திருமண விழா நிகழ்ச்சியில் கலந்து கொல்கிறார்.
தொடர்ந்து, சாலை வழியாக ஈரோடு செல்லும் முதலமைச்சர் ஈரோட்டில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
மாலையில் லேசம் செல்லும் முதலமைச்சர் சேலம் திமுக மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து சட்டமன்ற தேர்தல் பணிகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை அதிகரிப்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு நடுவே முதலமைச்சர் ரோட் ஷோ செல்கிறார். அதனை முடித்து விட்டு மேட்டூர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
அதனைத் தொடர்ந்து 12 ஆம் தேதி சேலம் செல்லும் முதலமைச்சர் மேட்டூர் அணையை விவசாயிகளுக்கும் மற்றும் நீர் பாசனத்திற்காக திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு ஜூன் 12-ம் தேதி மாலை 4 மணிக்கு சேலத்திலிருந்து விமான மூலமாக புறப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை வருகிறார்.