மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த நிகிதா என்பவர், காந்த 28-ம் தேதி தனது தாய் சிவகாமியுடன் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் உள்ள கோயில் ஒன்றுக்கு காரில் சென்றுள்ளார். அங்கு காவலாளியாக பணியில் இருந்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமாரிடம் தனது காரை ஓரமாக நிறுத்துமாறு சாவியை கொடுத்து சென்றுள்ளார். சாமிதரிசனம் முடித்து விட்டு திரும்பி வந்து பார்த்தப் போது நிகிதாவின் காரில் இருந்த ஒன்பதரை சவரன் நகை மாயமானதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக நிகிதா அஜித்குமார் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்க, அஜித்தை அழைத்து சென்ற மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார், சரமாரியாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா மீது பணமோசடி வழக்க்கு உள்ளது தெரியவந்துள்ளது.
வேலை வாங்கித் தருவதாக சுமார் ரூ.16லட்சம் வரை மோசடி செய்ததாக நிகிதா மீது கடந்த 2011-ம் ஆண்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2010-ல் துணை முதலமச்சரின் உதவியாளரை தனக்கு தெரியும் எனக் கூறி நிகிதா பணமோசடி செய்துள்ளார். பணத்தை கொடுத்தவர்கள் திருப்பி கேட்டப்போது, நிகிதாவின் குடும்பத்தினர் மிரட்டியதாகவும், இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க அதனடிப்படையில் நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.