வங்க கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் நாளை மாலை அல்லது இரவு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த பகுதியாக வலுபெற்று தீவிர புயலாக மாறியுள்ளது.
மோன்தா என பெயரிடப்பட்ட இந்த புயல் 3மணி நேரத்திற்கு மேலாக மணிக்கு 16கி.மீ. வேகத்தில் நகர்ந்து. <span;>காலை 5.30 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து 600 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கேயும், ஆந்திராவின் காகிநாடாவில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 680 கி.மீ. <span;>தொலைவிலும் புயலானது நிலை கொண்டிருந்தது. இது <span;>அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி வங்கக்கடலின் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதியின் மேல் தொடர்ந்து நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து நாளை காலை தீவிர புயலாக உருவெடுத்து ஆந்திராவின் மசிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
