தமிழகத்தில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பான தங்குமிடத்தை உறுதிசெய்யும் வகையில், தமிழக அரசால் தொடங்கப்பட்ட தோழி மகளிர் விடுதிகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதன் தொடர்ச்சியாக, மேலும் பல இடங்களில் தோழி விடுதிகளை விரிவுபடுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

 

ஊட்டி, திருப்பத்தூர், திருவாரூர் மாவட்டம் விளமல் கிராமம், கள்ளக்குறிச்சி மாவட்டம் வீர சோழபுரம் மற்றும் நாமக்கல் ஆகிய பகுதிகளில் புதிய தோழி மகளிர் விடுதிகளைக் கட்டுவதற்கான டெண்டர்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. இது, பணிபுரியும் பெண்களுக்கான பாதுகாப்பான மற்றும் மலிவான தங்குமிடங்களை உருவாக்கும் அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.

 

முன்னதாக, உலக மகளிர் தினத்தன்று தமிழக முதலமைச்சர் அவர்கள், காஞ்சிபுரம், ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை மற்றும் கரூர் ஆகிய ஒன்பது ஊர்களில், 72 கோடி ரூபாய் மதிப்பில், 700 படுக்கை வசதி கொண்ட புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த 12 விடுதிகளின் கட்டுமானப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

தமிழகம் முழுவதும் தோழி விடுதிகள் விரிவாக்கப்படுவது, பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. இது, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மன அமைதியையும், பாதுகாப்பான சூழலையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version