புரோட்டின் கொண்ட முட்டை விலை நாளுக்கு நாள் அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படுகிறது. அத்தோடு மாநிலம் முழுவதும் முட்டை கொள்முதல் அதிகரித்து வருவதன் காரணமாக இன்று (13.05.2025) முட்டை விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் நாமக்கலில் இருந்து தான் பிராதனமாக முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாமக்கலில் இருந்து விற்பனை செய்யப்படும் முட்டையின் விலையானது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேறுபடுகிறது.

நாமக்கலில் நேற்று ரூ.5.25 காசுகளாக விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை சென்னையில் ரூ.5.80 காசுகளாக விற்பனையானது. அந்த வகையில் இன்று நாமக்கலில் முட்டையின் விலை ரூ.5.35காசுகளாக விற்பனையாகிறது. நேற்று (12.05.2025) நாமக்கலில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது. அதனால் நாமக்கல் மண்டல கோழிப் பண்ணைகளில் இன்று (13.05.2025) ரூ.5.35காசுகளுக்கு முட்டை கொள்முதல் செய்யப்பட உள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்

அதேப் போல், நாமக்கலில் கறிக்கோழி கிலோ ரூ.105-க்கும் முட்டைக் கோழி ரூ.97-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவற்றின் விலைகளில் மாற்றம் ஏதுமில்லை எனவும் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version