செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் இன்று திருமணம் செய்து கொண்ட தனசேகர் – ப்ரீத்தி தம்பதி, மணக்கோலத்தில் காட்டூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கு வந்து தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் ஆர்வத்துடன் வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்தச் சூழலில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த தனசேகர் – ப்ரீத்தி ஆகியோருக்கு இன்று காலை திருமணம் நடைபெற்றது.

தங்களது வாழ்வின் மிக முக்கியமான தருணத்திலும், நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஜனநாயகக் கடமையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்தத் தம்பதியினர் திருமணக் கோலத்திலேயே நேராக வாக்குச் சாவடிக்கு வந்தனர்.

பொத்தேரி அருகே அமைந்துள்ள காட்டூர் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்த புதுமணத் தம்பதி, பொதுமக்களுடன் வரிசையில் நின்று தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version