சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நேற்றைய விலை பட்டியலின் படி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி 24 ct தங்கத்தின் விலை கிராமுக்கு ₹14,ஆயிரத்து 182 ரூபாயாகவும் , ஒரு சவரன் ₹1,லட்சத்து 13,ஆயிரத்து 456 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
22ct தங்கத்தின் விலையைப் பொறுத்தவரையில், ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்திற்கும் , ஒரு சவரன் ஒரு லட்சத்து நான்காயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. தங்கம் விலையில் மாற்றமில்லாததால் விடுமுறை ஆன இன்றும் கடைகளில் விற்பனை சூடுபிடித்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளி ரூபாய் இரண்டு லட்சத்து 75 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் பொருளாதார மந்தம், அமெரிக்க ஃபெடரல் வங்கி வைப்புக்கான வட்டி விகிதம் குறைப்பு, தங்கத்தின் தேவை அதிகரிப்பு, தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதி முதலீட்டாளர்கள் அதிக அதிக அளவில் முதலீடு செய்வது போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெள்ளியை தொழில்துறையினர் அதிக அளவில் வாங்கி குவித்து வருகின்றனர். இதனால், இதன் விலையும் அதிரடியாக உயர்கிறது.
