தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி வயது முதிர்வு காரணமாக சென்னையில் உயிரிழந்தார்.
சட்டமன்ற தேர்தல் காரணமாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார். நேற்று கிருஷ்ணகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் தவெக கட்சியை விமர்சித்து பேசி வந்தார். தொடர்ந்து தேமுதிக பொதுக்கூட்டம் மற்றும் பிரச்சாரம், தேர்தல் பணிகளில் பிரேதமலதா விஜயகாந்த் ஈடுபட்டு வரும் சூழலில், அவருக்கு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள அவரது தாயார் அம்சவேணி திடீரென உயிரிழந்துள்ளார். வயது முதிர்வு காரணமாக உயிரிழந்ததாக சொல்லப்படும் நிலையில், பிரேமலதா விஜயகாந்தின் தாய் உடல் சாலி கிராமத்தில் உள்ள சுதீஷ் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தாய் இறந்த செய்தி கேட்ட பிரேமலதா தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பியுள்ளார். அம்சவேணியின் இறுதி ஊர்வலம் விருகம்பாக்கம் இல்லத்தில் இருந்து நாளை மதியம் 1 மணி அளவில் தொடங்கி வடபழனி ஏவிஎம் மின்மயானத்தில் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.