கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்தது பெரும் சர்ச்சையான நிலையில் அன்று முதல் தவெக பொதுக்கூட்டங்களுக்கு காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இருப்பினும் மற்ற அரசியல் கட்சிகளுக்கெல்லாம் விதிக்காத கட்டுப்பாடுகளை ஏன் தவெகவுக்கு மட்டும் விதிக்கிறார்கள் என தவெக தலைவர் விஜய் சமீபத்தில் சேலத்தில் பேசிய போது கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனால் அந்த கூட்டத்திற்கும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது. அதாவது
5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி.. அதுவும் நுழைவுச்சீட்டோடு வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆனால் அப்படி இருந்தும் சேலத்தை சேர்ந்த சுராஜ் என்கிற வட மாநில வாலிபர் வெயில் தாங்க முடியாமல் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.
இந்நிலையில், வருகிற 23ஆம் தேதி விஜய் வேலூரில் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.. ஒருபக்கம், நிகழ்ச்சியில் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என தவெக அறிவுறுத்தியிருக்கிறது.. QR Code பாஸ் வைத்திருக்கும் 4900 பேருக்கு மட்டுமே அனுமதி என போலீஸ் கூறியிருக்கிறது.
