மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அறிவிப்பை வரவேற்று மீனவர் சங்கத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் வேளையில், மாநிலங்களவைக்கான வேட்பாளர் அறிவிப்பை வெளியிட்டு அதிரடி காட்டியிருக்கிறது திமுக. இந்தநிலையில், மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுகவிற்கான நான்கு இடங்களில் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு இடம் தேமுதிகவிற்கும் வழங்கப்பட்ட நிலையில் மீதம் உள்ள இரண்டு இடங்களில் திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன் தினம் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த கான்ஸ்டன்டைன் ரவீந்திரனை அறிவித்ததற்கு வரவேற்கும் வகையில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மீனவ சமூதாயத்தினர் நன்றி தெரிவித்தனர்.
