Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கும்பகோணம்: பிளஸ் 1 மாணவர்களால் தாக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர் மூளைச்சாவு
    தமிழ்நாடு

    கும்பகோணம்: பிளஸ் 1 மாணவர்களால் தாக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர் மூளைச்சாவு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    murdd
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம் அரசுப் பள்ளியில் பிளஸ் 1 மாணவர்கள் தாக்கி காயமடைந்த பிளஸ் 2 மாணவர் இன்று மூளைச்சாவு அடைந்துள்ளார்.

    பட்டீஸ்வரம் அரசு அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகள் 1,000-க்கும் அதிகமானோர் பயின்று வருகின்றனர். இவர்களில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில், பட்டீஸ்வரம் தேரோடும் கீழ வீதியில் டிச.4-ம் தேதி 2 வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களும் மோதிக் கொண்டனர். அப்போது, பிளஸ் 1 மாணவர்கள் 15 பேர் சேர்ந்து பிளஸ் 2 மாணவர் ஒருவரின் தலையில் கட்டையால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த மாணவர், தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்கப்பட்டார்.

    இந்தச் சம்பவம் தொடர்பாக தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பிளஸ் 1 மாணவர்கள் 15 பேரை கைது செய்து, தஞ்சாவூரில் உள்ள சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் நேற்று அடைத்தனர்.

    இந்நிலையில், சிகிச்சையில் இருந்த பிளஸ் 2 மாணவர், மூளைச்சாவு அடைந்ததை இன்று மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து, அந்த மாணவர் தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் 5 பேர் அடங்கிய குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிளஸ் 2 மாணவரின் வீடு, பள்ளி மற்றும் பட்டீஸ்வரத்தில் போலீஸார் பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகும்பகோணம் அருகே +2 மாணவர் கொலை…. அன்புமணி அதிர்ச்சி
    Next Article கலிங்கப்பட்டிக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருது! முதல்வர் ஸ்டாலினுக்கு வைகோ நன்றி
    Editor TN Talks

    Related Posts

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    April 6, 2026

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    April 6, 2026

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    April 6, 2026

    தமிழ்நாடு தேர்தல்!. இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு!.

    April 6, 2026

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.