தமிழக பாடத்திட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 2ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்தநிலையில், பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று(பிப். 9) தொடங்கியது. சென்னையில் இரண்டு கட்டமாக செய்முறைத் தேர்வு நடக்கிறது. பிளஸ் 2 வகுப்புக்கு இன்று தொடங்கி 14ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு 16ம் தேதி முதல் 21ம் தேதி வரையும், பத்தாம் வகுப்புக்கு 23ம் தேதி முதல் 28ம் தேதி வரையும் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி முதல்சுற்று இன்று முதல் 12ம் தேதி வரையும், இரண்டாம் சுற்று 13ம் தேதி முதல் 17ம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டு 7,99,892 மாணவ, மாணவிகள் 26,44, தனித்தேர்வர்கள் என மொத்தம் 8.26 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். அந்தவகையில் இன்று மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தேர்வுகளை எழுதி ஆய்வகங்களில் மாதிரியை செய்துவருகின்றனர். இந்த நிலையில் சென்னை நந்தனம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நேரில் சென்று அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
