திண்டுக்கலில் கச்சேரி தெரு மேற்கு தாலுகா அலுவலகம் அருகே திண்டுக்கல் மாவட்ட சிறை உள்ளது. இங்கு மதுரை, சுப்ரமணியபுரம் காவல் நிலைய போலீசார் குற்ற வழக்கில் ஈடுபட்ட நபரை கைது செய்து மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைப்பதற்காக அழைத்து வந்தபோது, நேற்று(25.05.2025) சனிக்கிழமை இரவு மாவட்ட சிறை சாலை வாசலில், போலீசார் கவனக்குறைவாக இருப்பதை அறிந்து கொண்ட குற்றவாளி போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பி ஓடியுள்ளார்.

அங்கிருந்து சென்று மாவட்ட சிறை பின்பு உள்ள சின்ன ஐயங்குளம் பகுதியில் இருட்டில் ஒளிந்து கொண்டான். உடனடியாக மதுரை சேர்ந்த போலீசார் அய்யன்குளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் கைதியை விரட்டி சென்று பிடித்து கொடுத்தனர். பின்னர் அவரை திண்டுக்கல் மாவட்ட சிறையில் கைதியை அடைத்தனர்.
