காரைக்காலில் இயங்கி வரும் தனியார் டைல்ஸ் தொழிற்சாலையில் திடீரென 36 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்த தனியார் டைல்ஸ் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழில் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் அடுத்த திருநள்ளாறு பகுதியில் உள்ள பிரபல தனியார் டைல்ஸ் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் திடீரென எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் 36 தொழிலாளர்களை கட்டாய ஓய்வு என்கிற அடிப்படையில் பணிநீக்கம் செய்து தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களை வெளியேற்றியதால் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து 36 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்த தனியார் டைல்ஸ் தொழிற்சாலை கண்டித்து 200க்கு மேற்பட்ட டைல்ஸ் தொழிற்சாலை ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் காரைக்கால் – கும்பகோணம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனை அடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை செய்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.