தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரக்கூடிய ஜூன் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 2 ஆம் தேதி முதல் தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் நிலையில் 9 ஆம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற உள்ளது.
குறிப்பாக, இந்த 6 இடங்களில் திமுக சார்பில் வில்சன், சல்மா, எஸ் ஆர் சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் என 4 பேர் வேட்பாளர்களாகவும் அதிமுக சார்பில் இன்பதுறை, தனபால் ஆகியோர் வேட்பாளராக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நாளை மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடக்கூடிய திமுக அதிமுக வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். ஜூன் 10ஆம் தேதி வேப்பமனுக்கல் மீதான பரிசீலனையும், பனிரெண்டாம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் வேப்பமனுக்களை திரும்ப பெறக்கூடிய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், சரியான முன்மொழிகளுடன் ஆறு இடங்களுக்கு ஆறு பேர் மட்டுமே வேட்புமுனு தாக்கல் செய்திருந்தால் அன்றைய தினமே அவர்கள் போட்டி இன்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்படுவார்கள். ஒருவேளை தேர்தலில் போட்டியிருந்தால் ஜூன் 19ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் தலைமை செயலகத்தில் உள்ள பேரவை குழுக்கள் கூட்ட அறையில் தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்பிரமணியம் தலைமையில் தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.