Close Menu
    What's Hot

    திருப்பதி லட்டு கலப்படத்திற்கு செக்!. ரூ.25 கோடியில் லேப்!. பிரான்ஸில் இருந்து வரும் உயர்தர கருவிகள்!.

    ஆப்கான் மீது பாக்., வான்வழித் தாக்குதல்!. 80 தீவிரவாதிகள் பலி!.

    டி20 உலகக்கோப்பை!. சென்னை வந்தடைந்தது இந்திய அணி!. காதலியுடன் ஜாலி செய்யும் ஹர்திக் பாண்டியா!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»புழல் ஏரியி​லிருந்து மீண்​டும் உபரிநீர் திறப்பு
    தமிழ்நாடு

    புழல் ஏரியி​லிருந்து மீண்​டும் உபரிநீர் திறப்பு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    puzhal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் இருந்து நீர்​வரத்து அதி​கரிப்​பால் புழல் ஏரியி​லிருந்து மீண்​டும் உபரிநீர் திறக்​கப்​பட்​டுள்​ளது; பூண்டி ஏரியி​லிருந்து வெளி​யேற்​றப்​படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி​யாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சென்னை குடிநீர் ஏரி​களில் ஒன்​றான புழல் ஏரிக்​கு, வடகிழக்கு பரு​வ​மழை​யால் நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் இருந்து நீர்​வரத்து உள்​ளது. ஆகவே, முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக கடந்த மாதம் 15-ம் தேதி முதல் புழல் ஏரியி​லிருந்து உபரிநீர் திறக்​கப்​பட்டு வந்​தது. நீர்​வரத்து குறைந்​த​தால், கடந்த மாதம் 29-ம் தேதி புழல் ஏரியி​லிருந்து உபரிநீர் திறப்​பது நிறுத்​தப்​பட்​டது.

    இந்​நிலை​யில், நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் நேற்று முன் தினம் பரவலாக பெய்த மழை​யால் ​புழல் ஏரிக்கு நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது. நேற்று காலை 6 மணி​யள​வில் நீர்​வரத்​து, விநாடிக்கு 925 கனஅடி​யாக இருந்​தது. இதனால், 3,300 மில்​லியன் கனஅடி கொள்​ளளவு, 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரி​யின் நீர்​இருப்பு 2,954 மில்​லியன் கனஅடி​யாக​வும், நீர்​மட்ட உயரம் 19.71 அடி​யாக​வும் இருந்​தது. முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக நேற்று மாலை 5 மணி​யள​வில் விநாடிக்கு 500 கனஅடி உபரிநீர் திறக்​கப்​பட்​டது.

    பூண்டி ஏரியி​லிருந்​தும் கடந்த மாதம் 15-ம் தேதி மதி​யம் முதல் உபரிநீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. நேற்று காலை 6 மணி​யள​வில் பூண்டி ஏரிக்​கு, நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் இருந்து நீர்​வரத்து விநாடிக்கு 1,280 கன அடி​யாக​வும், ஏரியி​லிருந்து வெளி​யேற்​றப்​படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 1,000 கனஅடி​யாக​வும் இருந்​தது.

    இதனால், 3,231 மில்​லியன் கனஅடி கொள்​ளளவு, 35 உயரம் கொண்ட பூண்டி ஏரி​யின் நீர்​இருப்​பு, 2,742 மில்​லியன் கன அடி​யாக​வும், நீர்​மட்ட உயரம், 33.74 அடி​யாக​வும் இருந்​தது. நேற்று மதி​யம் 2 மணி​யள​வில், பூண்டி ஏரியி​லிருந்து வெளி​யேற்​றப்​படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 2,000 கனஅடி​யாக உயர்த்​தப்​பட்​டது. புழல், பூண்டி ஏரி​களின் உபரிநீர் செல்​லும் கால்​வாய், கொசஸ்​தலை ஆற்​றின் இரு கரையோரங்​களில் தாழ்​வான பகு​தி​களில் வசிக்​கும் மக்​களுக்​கு மீண்​டும்​ வெள்​ள அ​பாய எச்​சரிக்​கை விடுத்​துள்​ளது.

    பரந்​தூர் விமான நிலை​யம் அமைய உள்ள ஓடு​தளப் பகு​தி​யில் வெள்​ளப் பெருக்கு ஏற்​பட்​டுள்​ளது. வெள்ளநீர் அந்​தப் பகு​திக்கு அரு​கில் உள்ள குணகரம்​பாக்​கம் தரைப்​பாலத்தை மூழ்​கடித்​திருப்​ப​தால் அச்​சத்​துடன் அந்​தப் பாலத்தை ​மக்​கள் கடந்து செல்​லும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. இத்​தகைய இடத்​தில் விமான நிலை​யம் அமைக்​கப்​பட்​டால், அது வெள்ள அபா​யத்தை மேலும் அதி​கரிக்​கும் என்​றும் நீர்​நிலைகள் முழு​வது​மாக அழிக்​கப்​பட்​டு​விடும் என்றும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    puzhal#water#release
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடிசம்பர் 1 முதல் 19 வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!
    Next Article கொல்லைப்புற வழியாக முதல்வரானவர் பழனிசாமி! – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தாக்கு
    Editor TN Talks

    Related Posts

    என் சகோதரிகளின் நலனே முக்கியம்!. ரூ.5000 வழங்கியதன் பின்னணியை விளக்கிய முதல்வர் ஸ்டாலின்!

    February 23, 2026

    SIR பணிகளுக்குப் பின் புதிய பட்டியல்!. தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.67 கோடியாக உயர்வு!.

    February 23, 2026

    திமுக கூட்டணி கல்லாப்பெட்டி கூட்டணி; காமெடி அதிமுகவுக்கு இடமில்லை!. விஜய் விமர்சனம்! 

    February 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பதி லட்டு கலப்படத்திற்கு செக்!. ரூ.25 கோடியில் லேப்!. பிரான்ஸில் இருந்து வரும் உயர்தர கருவிகள்!.

    ஆப்கான் மீது பாக்., வான்வழித் தாக்குதல்!. 80 தீவிரவாதிகள் பலி!.

    டி20 உலகக்கோப்பை!. சென்னை வந்தடைந்தது இந்திய அணி!. காதலியுடன் ஜாலி செய்யும் ஹர்திக் பாண்டியா!

    உச்சகட்ட போர் பதற்றம்!. இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்!

    என் சகோதரிகளின் நலனே முக்கியம்!. ரூ.5000 வழங்கியதன் பின்னணியை விளக்கிய முதல்வர் ஸ்டாலின்!

    Trending Posts

    திருப்பதி லட்டு கலப்படத்திற்கு செக்!. ரூ.25 கோடியில் லேப்!. பிரான்ஸில் இருந்து வரும் உயர்தர கருவிகள்!.

    February 23, 2026

    ஆப்கான் மீது பாக்., வான்வழித் தாக்குதல்!. 80 தீவிரவாதிகள் பலி!.

    February 23, 2026

    டி20 உலகக்கோப்பை!. சென்னை வந்தடைந்தது இந்திய அணி!. காதலியுடன் ஜாலி செய்யும் ஹர்திக் பாண்டியா!

    February 23, 2026

    உச்சகட்ட போர் பதற்றம்!. இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்!

    February 23, 2026

    என் சகோதரிகளின் நலனே முக்கியம்!. ரூ.5000 வழங்கியதன் பின்னணியை விளக்கிய முதல்வர் ஸ்டாலின்!

    February 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.