தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் கோவையில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டங்களையும், பணிகளையும் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆய்வின் விவரங்கள்
காந்தி ராஜன் தலைமையில், பி.ஆர்.ஜி. அருண்குமார், ராமகருமாணிக்கம், சின்னதுரை, சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய இக்குழுவினர், கோவையில் உள்ள அவிநாசி சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்தனர்.
அதைத் தொடர்ந்து, காந்திபுரம் பகுதியில் உள்ள சிறைச்சாலை கைதிகள் பணிபுரியும் பெட்ரோல் பங்க்கிற்கும் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்குப் பணிபுரியும் கைதிகளிடம் அவர்களின் தேவைகள் குறித்துக் கேட்டறிந்தனர்.
தொடர் ஆய்வுகள் மற்றும் கூட்டம்
மேலும், இக்குழுவினர் கோவை மத்திய சிறை, மருதமலை கோவில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களுக்கும் சென்று ஆய்வுகள் மேற்கொண்டனர்.
இன்று மாலை, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்துகின்றனர்.