விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகம் புதுச்சேரியில் சாலைவலம் செல்ல புதுச்சேரி அரசாங்கத்திடம் அனுமதி கேட்டிருந்தது. அது சம்பந்தமாக இன்று மதியம் புதுச்சேரி சட்டப்பேரவையில் ஐஜி, டிஐஜி‌ மற்றும் முதுநிலை காவல் கண்காணிப்பாளருடன் முதல்வர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிவில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழகம் புதுச்சேரியில் சாலைவலம் செல்ல அனுமதி கொடுக்கவில்லை.

இது சம்பந்தமாக புதுச்சேரி டிஐஜி சத்திய சுந்தரத்திடம் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு, தமிழக வெற்றிக் கழகம் சாலைவலம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் அவர்களுக்கு பொது இடத்தில் வைத்து பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கியதாகவும் கூறியுள்ளார். ஆனால் நிச்சயமாக ரோடு ஷோ ( சாலைவலம் ) செல்ல அனுமதி கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

புதுச்சேரி அரசு கூறிய அறிவுரைப்படி விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழகம் புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழக வெற்றி கழகம் வேண்டுகோளுக்கு இணங்க புதுச்சேரி அரசு சாலைவலம் ஏன் கொடுக்கவில்லை என்கிற கேள்வி சமூக வலைதளங்களில் பரவலாக எழுந்து வருகின்றது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவே இந்த முடிவை புதுச்சேரி அரசு எடுத்துள்ளது என்றும் வல்லுநர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version