Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கடல் அரிப்பு: திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு பள்ளம்
    தமிழ்நாடு

    கடல் அரிப்பு: திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு பள்ளம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 15, 2025Updated:December 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    trich
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் முகப்பு பகுதி கடற்​கரை​யில் கடல் அரிப்பு காரண​மாக 6 அடி ஆழத்​துக்கு பள்​ளம் ஏற்​பட்​டுள்​ளது.

    திருச்​செந்​தூர் கோயிலுக்கு தின​மும் ஆயிரக்​கணக்​கான பக்தர்கள் வரு​கின்​றனர். இங்கு வரும் பக்தர்கள் கடல் தீர்த்த கட்​டத்​தி​லும், நாழி கிணற்​றி​லும் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்​கின்​றனர்.

    அரு​கே​யுள்ள அமலிநகர் கடற்​கரை​யில் தூண்​டில் வளைவு பாலம் அமைக்​கப்​பட்ட பின்​னர், திருச்​செந்​தூர் கோயில் பகுதி கடல் அரிப்​பால் பாதிக்​கப்​பட்டு வரு​கிறது. இதனால் கடற்​கரைப் பகுதி பாதி​யாக சுருங்​கி​விட்​டது.

    கடல் அரிப்​பைத் தடுக்க சென்னை ஐஐடி பேராசிரியர்​கள் நேரில் பார்​வை​யிட்​டு, இது தொடர்​பான அறிக்​கையை தமிழக அரசிடம் சமர்ப்​பித்​துள்​ளனர்.

    அதே​போல, மத்​திய கடல் ஆராய்ச்சி மையத்​தினரும் ஆய்வு செய்​து, தங்​களது அறிக்​கையை தமிழக அரசிடம் சமர்​பித்​துள்​ளனர். கடல் அரிப்​பைப் தடுக்க ரூ.30 கோடி​யில் திட்​டம் தயாரிக்​கப்​பட்​டு, அரசின் பரிசீலனை​யில் உள்​ளது.

    இந்​நிலை​யில், கடந்த சில வாரங்​களுக்கு முன்பு தென்​தமிழக கடலோரப் பகு​தி​களில் கனமழை பெய்​தது. தொடர்ந்து கடல் அரிப்பு அதி​கரித்து வந்​தது. தற்​போது, திருச்​செந்​தூர் கோயில் கடல் முகப்​பில் பக்தர்கள் புனித நீராடக் கூடிய இடத்​தில் சுமார் 200 மீட்​டர் நீளத்​துக்​கு, 3 அடி முதல் 6 அடி வரை பள்​ளம் ஏற்​பட்​டுள்​ளது.

    இதனால் பக்தர்கள் புனித நீராட முடி​யாமல் சிரமப்​பட்டு வரு​கின்​றனர். இதுகுறித்து அரு​கில் உள்ள மீனவ கிராம மக்​கள் கூறும்​போது, ‘வழக்​க​மாக கார்த்​தி​கை, மார்​கழி மாதங்​களில் கடலில் காற்​றின் திசை​யில் மாற்​றம் ஏற்​படும்.

    அப்​போது கடல் அலை​யின் வேகத்​தில் மாற்​றம் காரண​மாக கடலோரப் பகு​தி​களில் அரிப்பு ஏற்​பட்டு பள்​ளம் ஏற்​படும். அதே நிலைப்​பாடு காரண​மாகத்​தான் கோயில் பகு​தி​யில் கடல் அரிப்பு அதி​கரித்​து, 6 அடி ஆழத்​துக்கு பள்​ளம் விழுந்​துள்​ளது.

    நாட்​கள் செல்​லச் செல்ல இது சாதாரண நிலைக்கு மாறி​விடும்’ என்​றனர். தமிழகத்​தின் முக்​கிய ஆன்​மிகத் தலமான திருச்​செந்​தூர் கோயில் முகப்​பில் கடல் அரிப்பு ஏற்​படு​வதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்​து உள்​ளனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முகப்பு பகுதி கடற்கரையில் கடல் அரிப்பால் ஏற்பட்டுள்ள பள்ளம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாகை மாவட்டத்தில் மழைநீர் வடியாததால் 2,000 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம்
    Next Article “பாஜகவை விஜய் விமர்சிக்காதது ஏன்?” – பெ.சண்முகம் கேள்வி
    Editor TN Talks

    Related Posts

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026

    அடுத்தடுத்து ரத்தாகும் விஜய்யின் பிரசாரம்!. கவரப்பேட்டை கூட்டமும் ரத்து!. தொண்டர்கள் ஏமாற்றம்!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    அடுத்த அதிரடி!. தலைமைச் செயலர், உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    April 11, 2026

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    April 11, 2026

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.