Close Menu
    What's Hot

    ராமதாஸ் உடல் நலம் குறித்து விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!.

    ”எரிபொருளுக்காக ஏங்குவீர்கள்”!. அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!.

    மீண்டும் படம் நடிக்கும் விஜய்? ‘ஜனநாயகன்’ நஷ்டத்தை ஈடு செய்ய அதிரடி முடிவு?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அஜித்குமார் உடலில் 18 காயங்கள்.. இபிஎஸ் கேள்வி..
    தமிழ்நாடு

    அஜித்குமார் உடலில் 18 காயங்கள்.. இபிஎஸ் கேள்வி..

    Editor TN TalksBy Editor TN TalksJuly 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps angry
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் எழுப்பியுள்ள கேள்விகள் வருமாறு..

    திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

    மேலும், கழுத்துப் பகுதியில் கொடுக்கப்பட்ட பெரும் அழுத்தம் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இது முழுக்க முழுக்க ஸ்டாலின் அரசின் காவல்துறை அராஜகத்தால் நடந்த கொலை!

    ஸ்டாலின் ஆட்சியில் நடந்த 25 காவல் மரணங்களும் அப்பட்டமான மனித உரிமை மீறல். இதனை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முன்வந்து விசாரிக்க வேண்டும்.

    இந்த நிலையில், அஜித்குமார் உயிரிழந்ததற்கு காரணம் “வலிப்பு” என FIR பதிவு செய்துள்ளது ஸ்டாலின் அரசின் காவல்துறை. “Deja Vu” எல்லாம் இல்லை- விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது எந்த பச்சைப்பொய்யை சட்டப்பேரவையில் கூச்சமின்றி சொன்னாரோ, அதே பொய்யை அப்படியே அஜித்குமாருக்கு மீண்டும் சொல்கிறது ஸ்டாலினின் காவல்துறை.

    நீங்கள் இப்படியெல்லாம் தில்லுமுல்லு செய்வீர்கள் எனத் தெரிந்து தான், எனது அறிவுறுத்தலின்படி, மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் #JusticeForAjithkumar பதாகைகளை ஏந்தி, நீதிக்கான குரலாக ஒலித்தனர்.

    நாடு முழுக்க #JusticeForAjithkumar #NationWithAjith என பெரும் அதிர்வலைகளை இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதில் சொல்ல வேண்டிய முதல்வர் எங்கே ஒளிந்துக் கொண்டிருக்கிறார்?
    “ஆய்வுக் கூட்டம் நடத்துகிறோம்; CBCID-க்கு மாற்றுகிறோம்” என்ற உங்கள் நாடகங்களை சில ஊடகங்கள் நம்பலாம். மக்களும் சரி, நாங்களும் சரி- துளி கூட நம்பவில்லை!

    பொம்மை முதல்வரின் தறிகெட்ட ஆட்சியில் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர் தமிழ்நாட்டு மக்கள். போலீஸின் போலி FIR மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே இந்த வழக்கை CBI-க்கு மாற்ற வேண்டும்.
    இக்கொலைக்கு காவல்துறைக்கு பொறுப்பான பொம்மை முதல்வர் முழு பொறுப்பேற்று, பதில் அளிக்க வேண்டும்! வீடியோ ஷூட் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் திரு. ஸ்டாலின் அவர்களே? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்!

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article9-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை… விடுதியில் தங்கி பயில பிடிக்காமல் செய்த விபரீதம்…
    Next Article சிவகங்கை எஸ்.பி.ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
    Editor TN Talks

    Related Posts

    ராமதாஸ் உடல் நலம் குறித்து விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!.

    April 13, 2026

    ”எரிபொருளுக்காக ஏங்குவீர்கள்”!. அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!.

    April 13, 2026

    மீண்டும் படம் நடிக்கும் விஜய்? ‘ஜனநாயகன்’ நஷ்டத்தை ஈடு செய்ய அதிரடி முடிவு?

    April 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ராமதாஸ் உடல் நலம் குறித்து விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!.

    ”எரிபொருளுக்காக ஏங்குவீர்கள்”!. அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!.

    மீண்டும் படம் நடிக்கும் விஜய்? ‘ஜனநாயகன்’ நஷ்டத்தை ஈடு செய்ய அதிரடி முடிவு?

    அட்சய திருதியை 2026!. தங்கம் வாங்க உகந்த நேரமும், செல்வம் பெருக எளிய வழிபாடுகளும்!

    விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் பும்ரா!. 4 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட இல்லை!. ரசிகர்கள் அதிர்ச்சி!

    Trending Posts

    ”எரிபொருளுக்காக ஏங்குவீர்கள்”!. அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!.

    April 13, 2026

    மீண்டும் படம் நடிக்கும் விஜய்? ‘ஜனநாயகன்’ நஷ்டத்தை ஈடு செய்ய அதிரடி முடிவு?

    April 13, 2026

    இலக்கு மாறிய ஏவுகணை; சிதறிய உயிர்கள்!. நைஜீரிய அரசின் தவறால் நிகழ்ந்த 100 பேர் மரணம்!

    April 13, 2026

    நெல் சாகுபடி ஊக்கத்தொகை!. கடிதத்தை வெளியிட தயாரா?. நிர்மலாவுக்கு ஸ்டாலின் சவால்!.

    April 13, 2026

    விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் பும்ரா!. 4 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட இல்லை!. ரசிகர்கள் அதிர்ச்சி!

    April 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.