திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் குடிமங்கலம் பகுதியில் உள்ளது. இங்கு பணியாற்றி வந்த தந்தை-மகனுக்கு இடையே எழுந்த பிரச்சனையில் தந்தை மகனை கொல்ல அறிவாளுடன் துரத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து அவசர உதவி என் 100க்கு அழைத்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் தனது ஓட்டுநருடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அரிவாளுடன் சுற்றிய அந்நபரை பிடிக்க முயன்ற போது, அவர் சண்முகவேலின் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது ஓட்டுநருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அத்தோடு இல்லாமல், அந்த தந்தை, தனது மகனையும் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.
அங்கு சண்முகவேலை வெட்டி கொலை செய்துள்ளனர். மேலும் ஓட்டுநருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மகனையும் தந்தை வெட்டி உள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சண்முகவேலின் உடலை கைப்பற்றியதோடு, தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.