Close Menu
    What's Hot

    கொடுத்த வாக்கை பாஜக நிறைவேற்றவில்லை; மேடைகளில் புகைப்படம் கூட இல்லை!. சரத்குமார் ஆவேசம்!

    இந்தியர்களின் பாதுகாப்பு எங்களின் முதன்மைப் பொறுப்பு!. ஐக்கிய அரபு அமீரகம் உறுதி!.

    வரலாற்றில் முதல் முறை!. ரூ.94-ஐ தாண்டியது டாலர்!. அதிர்ச்சியில் இந்திய சந்தைகள்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருப்பத்தூர் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
    தமிழ்நாடு

    திருப்பத்தூர் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 1, 2025Updated:December 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1881005 stalind
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பத்தூர் அருகே 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பலியான 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த கோர விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் நிவாரணமாக அறிவித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் சிவகங்கை மாவட்ட ஆட்சியரையும், அந்த மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.ஆர்.பெரியகருப்பனையும் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டிருப்பதாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருந்தார்.

    திருப்பத்தூரிலிருந்து காரைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. பிள்ளையார்பட்டி அருகே நேற்று மாலை நிகழ்ந்த இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளின் முன்பகுதிகளும் முற்றிலும் நொறுங்கின.

    இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்த நிலையில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்தது. மேலும் காயமடைந்த 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

    இந்த கோர விபத்து குறித்து திருப்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை சம்பவம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் இரண்டு பேருந்துகளும் அதிவேகமாக இயக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பத்தூர் பேருந்து விபத்து: 10 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன
    Next Article மழையின்போது பள்ளிகளுக்கு விடுமுறை… ஜெயக்குமார் வலியுறுத்தல்
    Editor TN Talks

    Related Posts

    கொடுத்த வாக்கை பாஜக நிறைவேற்றவில்லை; மேடைகளில் புகைப்படம் கூட இல்லை!. சரத்குமார் ஆவேசம்!

    March 22, 2026

    குஜராத் முதல்வர் டூ பிரதமர் வரை!. 24 ஆண்டுகால இடைவிடாத ஆட்சிப் பயணம்!. மோடி புதிய சாதனை!

    March 22, 2026

    சட்டமன்ற தேர்தல்!. புதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு!.

    March 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கொடுத்த வாக்கை பாஜக நிறைவேற்றவில்லை; மேடைகளில் புகைப்படம் கூட இல்லை!. சரத்குமார் ஆவேசம்!

    இந்தியர்களின் பாதுகாப்பு எங்களின் முதன்மைப் பொறுப்பு!. ஐக்கிய அரபு அமீரகம் உறுதி!.

    வரலாற்றில் முதல் முறை!. ரூ.94-ஐ தாண்டியது டாலர்!. அதிர்ச்சியில் இந்திய சந்தைகள்!.

    ஏப்.1 முதல் புதிய விதிமுறை!. பான் கார்டு பெற இனி ஆதார் மட்டும் போதாது!. இந்த கூடுதல் ஆவணங்கள் கட்டாயம்!

    குஜராத் முதல்வர் டூ பிரதமர் வரை!. 24 ஆண்டுகால இடைவிடாத ஆட்சிப் பயணம்!. மோடி புதிய சாதனை!

    Trending Posts

    பேரிடி!. நாளை முதல் விமான கட்டண உச்ச வரம்பு நீக்கம்!. பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்பு!

    March 22, 2026

    குஜராத் முதல்வர் டூ பிரதமர் வரை!. 24 ஆண்டுகால இடைவிடாத ஆட்சிப் பயணம்!. மோடி புதிய சாதனை!

    March 22, 2026

    துப்பாக்கி முனையில் மிரட்டல்?. 10 லட்சம் லஞ்சப் புகார்!. உயிரை மாய்த்துக்கொண்ட அதிகாரி!. பதவியை இழந்த அமைச்சர்!.

    March 22, 2026

    கரூர் பிரசாரத்தில் விஜய் ஷூட்டிங்கா?. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு!

    March 22, 2026

    கொடுத்த வாக்கை பாஜக நிறைவேற்றவில்லை; மேடைகளில் புகைப்படம் கூட இல்லை!. சரத்குமார் ஆவேசம்!

    March 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.