ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வேயர் அறையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்தபோது ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற நில அளவையர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் ஏடிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலும் இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், ஜாஸ்மின் மும்தாஜ் முன்னிலையிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மாரிமுத்து என்பவர் அவரது நிலத்தை கள ஆய்வு செய்வதற்காக சர்வேயர் லஞ்சம் கேட்டதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் மாரிமுத்து ரசாயனம் தடவிய 5000 ரூபாய் நோட்டுகளை சர்வேயர் கனகராஜ் இடம் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கனகராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பத்திரப்பதிவு அலுவலங்களில் தொடர்ந்து பொதுமக்களிடம் அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இன்று நில அளவையர் லஞ்சம் பெற்று கைதான சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
