கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த டெய்லர் ராஜா கர்நாடக மாநிலம் விஜய்ப்பூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்தவரை தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். இவர், சிறைத் துறை அதிகாரிகள் இருவர் மற்றும் ஒரு பெண் ஆகிய மூவரை கொலை செய்த வழக்குகளிலும் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது.
டெய்லர் ராஜா கைது செய்யப்பட்ட பின்பு கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், போலீசார் அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர்.
27 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை தொடர் குண்டுவெடிப்பு கைதி கைது செய்யப்பட்டு உள்ளது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
