பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்துவதிலும், மக்களின வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதிலும் இந்தியாவிற்கே லீடராக தமிழ்நாடு விளங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உலக வங்கி சார்பில் சென்னை தரமணியில் அமைக்கப்பட்டுள்ள நவீன உலகளாவிய வணிக மையத்தை அவர் திறந்து வைத்து உரையாற்றினார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, இந்தியாவுக்கே தமிழ்நாடு லீடர் என்ற நிலையை அடைந்திருக்கிறோம் என்றார். தோழி விடுதிகள் திட்டத்திலும் உலக வங்கியின் உதவி உள்ளது. நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திலும் உலக வங்கியின் பங்கு உள்ளது. சாலை மேம்பாடு, நீர் பாசனம் போன்ற திட்டங்களிலும் உலக வங்கி உதவி உள்ளதாக குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்போருக்கு சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது என் கனவு என அவர் நெகிழ்ச்சியுடன் பேசினார். மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலனில் சிறந்த முன்னெடுப்புகளை தமிழ்நாடு மேற்கொண்டு வருகிறது. we safe எனும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
நகரமயமாக்கல் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. வெறும் கடன் உதவி என்று கூறி உலக வங்கியின் உதவியை சுருக்கி பார்க்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.