தென் மாவட்டங்களுக்கு செல்லும் நான்கு சுங்கச்சாவடிகளின் அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது என்ற உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜூலை 31 ஆம் தேதி வரைக்கும் நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
276 கோடி ரூபாய் சுங்க கட்டண பாக்கி செலுத்தாததால் கப்பலூர், சாட்டை, புதூர், நாங்குநேரி உள்ளிட்ட 4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை இயக்க அனுமதிக்க கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி அரசு தரப்பில் விடுக்கப்பட்ட முறையீட்டை ஏற்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரணை மேற்கொண்டார்.
பிரச்சனைக்கு தீர்வு காண சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் நிறுவனங்களுடன் போக்குவரத்து துறை செயலாளர் பேச்சு நடத்தி வருவதாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் தகவல் தெரிவித்தார்.
அரசு தரப்பு தகவலை ஏற்று பேருந்துகளை அனுமதிக்க கூடாது என்ற உத்தரவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார் .