இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்த வேலைநிறுத்தம் நடைபெற்று வரும் போதிலும், தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்கள் மற்றும் ஆசிரியர்கள் 90 சதவீதம் பேர் பணிக்கு வருகை தந்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்திலும் வழக்கம் போல அரசு ஊழியர்கள் வருகை தந்துள்ளனர்
தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய போராட்ட அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில், தமிழக அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் ஈடுபடக்கூடாது என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.
தமிழகத்தில் சில அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் சில கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருருந்தனர். போராட்டத்தில் பங்கேற்பது அரசு அலுவலகங்களின் சாதாரண செயல்பாட்டை பாதிக்கும் என்பதால், அரசு ஊழியர்கள் இதில் பங்கேற்க கூடாது எனவும், தமிழ்நாடு அரசு பணிக்கு வராத அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் படிகள் பிடித்தம் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது
மேலும், பணிக்கு வருகை தந்தவர்கள் வருகை தராதவர்கள் பட்டியலை காலை 10.15 மணிக்குள் துறைவாரியாக பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமைச் செயலகம், அரசு அலுவலகங்கள் மற்றும் ஆசிரியர்கள் வழக்கம் போல பணிக்கு வருகை தந்திருந்தனர் 90 சதவீதம் பேர் பணிக்கு வந்துள்ளதாக துறை வழியாக பட்டியல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது