முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பேத்திக்கு மருதமலை கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் !!!

கோவை, மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில், அவரது பேத்தி காவினிக்கு மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுதல் படி, அவரது மகன் சுகுந்தன் – திவ்யா தம்பதியினரின் மகள் காவினிக்கு மருதமலை கோவிலில் மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவேற்றினார்.

இந்நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர்கள் வழிபாடுகளை நடத்தினர். அதனைத் தொடர்ந்து குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த தமிழிசை சௌந்தரராஜனை அப்பகுதி பக்தர்கள் சந்தித்து வாழ்த்தினர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version