என்னை பொறுத்தவரை அதிமுகவும், பாஜகவும் அடிமை கட்சிகள்தான் ஆனால் யாருக்கு அடிமை?. மக்களுக்கு அடிமை என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
கோவையில் நடந்த பாஜக நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, எப்போது பார்த்தாலும் அதிமுக அடிமை கட்சி என்றும் பாஜகவைப் பொறுத்தவரை சங்கி கட்சி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். இருவருமே டெல்லிக்கு அடிமையாக இருப்பதற்காக கூட்டணியை உருவாக்கி இருக்காங்க என்று சொல்கிறார். இதனை தற்குறி உதயநிதி பேசியிருந்தால் மன்னித்து விட்டிருக்கலாம்.
ஆனால் தமிழகத்தின் முதல்வராக இருப்பவர் இப்படி பேசியிருப்பதால், அவருக்கு பதில் சொல்லாமல் இருந்தால் நல்லா இருக்காது. திமுக ஆட்சியில் இருந்ததை விட அதிக ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்கள் அதிமுகவும் அதன் தலைவர்களும். ஆமாம்.. என்னைப் பொறுத்தவரை அதிமுக அடிமை கட்சி தான்.. ஆனால் யாருக்கு அடிமை என்றால் மக்களுக்கு அடிமை.
மக்களை எஜமானர்களாக நினைத்து அவர்களுக்கு சேவை செய்கின்ற அடிமை கட்சி. பாஜகவும் அடிமை கட்சி தான்.. யாருக்கு என்றால் தமிழ்நாடு மக்களுக்கு நாங்கள் அடிமை. மக்களை எஜமானர்களாக நினைத்து அவர்களுக்கு சேவை செய்யக்கூடிய கூட்டணியை பார்த்து நீங்கள் அடிமை என்று சொன்னால், பெருமையாக அதனை நெஞ்சில் அணிந்துகொண்டு மக்களுக்காக பணியாற்றுவோம். களத்தில் நிற்போம். ஆட்சி மாற்றம் வரும் என்று அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
