Close Menu
    What's Hot

    கொடுத்த வாக்கை பாஜக நிறைவேற்றவில்லை; மேடைகளில் புகைப்படம் கூட இல்லை!. சரத்குமார் ஆவேசம்!

    இந்தியர்களின் பாதுகாப்பு எங்களின் முதன்மைப் பொறுப்பு!. ஐக்கிய அரபு அமீரகம் உறுதி!.

    வரலாற்றில் முதல் முறை!. ரூ.94-ஐ தாண்டியது டாலர்!. அதிர்ச்சியில் இந்திய சந்தைகள்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கொடுத்த வாக்கை பாஜக நிறைவேற்றவில்லை; மேடைகளில் புகைப்படம் கூட இல்லை!. சரத்குமார் ஆவேசம்!
    தமிழ்நாடு

    கொடுத்த வாக்கை பாஜக நிறைவேற்றவில்லை; மேடைகளில் புகைப்படம் கூட இல்லை!. சரத்குமார் ஆவேசம்!

    Editor web3By Editor web3March 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sarathkumar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாஜகவில் எனக்கு ஏன் பதவி தரவில்லை என ஆதரவாளர்கள் கேட்கின்றனர். எனக்கும் அந்த ஆதங்கம் உள்ளது என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைப் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்த நடிகர் சரத்குமார், தற்போது கட்சித் தலைமை மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். சென்னையில் இன்று (மார்ச் 22) தனது ஆதரவாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    பாஜகவில் இணைந்தபோது சரத்குமார் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகளுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. இது குறித்துப் பேசிய சரத்குமார், “கட்சியில் இணைந்து சிறப்பாகப் பணியாற்றி வருகிறோம். ஆனால், தலைவராகிய எனக்கே இதுவரை எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. தேர்தல் களம் நெருங்கும் வேளையில், எந்தப் பொறுப்பும் இன்றி எப்படிச் செயல்பட முடியும் என நிர்வாகிகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்,” என்றார்.

    கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் சரத்குமாரிடம் அதிரடியான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். “பாஜகவில் உரிய அங்கீகாரம் கிடைக்காத பட்சத்தில், ஏன் மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியையே தொடங்கக் கூடாது?” என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தொண்டர்களின் இந்த எண்ண ஓட்டத்தைத் தான் உள்வாங்கிக் கொண்டதாகச் சரத்குமார் தெரிவித்தார்.

    தனது அரசியல் பயணத்தைச் சுட்டிக்காட்டிய சரத்குமார், “1996-ம் ஆண்டு முதலே தமிழக அரசியல் மாற்றங்களில் முக்கியப் பங்காற்றியவன் நான். திருச்சி பொதுக்கூட்ட மேடையில் எனது படம் கூட இடம்பெறாதது குறித்துத் தொண்டர்கள் வருத்தப்படுகிறார்கள். இது வேதனை அல்ல, எனது ஆதங்கம். இது தொடர்பாகத் தமிழக பாஜக தலைவருக்கும், தேசியத் தலைமைக்கும் நாளை அதிகாரப்பூர்வமாகக் கடிதம் எழுத உள்ளேன். ஒரு பொறுப்பு இருந்தால் மட்டுமே என்னால் முழுமையாகச் செயல்பட முடியும் என்பது ஆதரவாளர்கள் மற்றும் எனது எண்ணம் என்பதை அதில் வெளிப்படுத்த உள்ளேன்,” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியர்களின் பாதுகாப்பு எங்களின் முதன்மைப் பொறுப்பு!. ஐக்கிய அரபு அமீரகம் உறுதி!.
    Editor web3
    • Website

    Related Posts

    குஜராத் முதல்வர் டூ பிரதமர் வரை!. 24 ஆண்டுகால இடைவிடாத ஆட்சிப் பயணம்!. மோடி புதிய சாதனை!

    March 22, 2026

    சட்டமன்ற தேர்தல்!. புதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு!.

    March 22, 2026

    அடுத்தடுத்து நெருக்கடி!. சோப்பு, லிக்யூட், வாஷிங் பவுடர் விலை உயர்கிறது!.

    March 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கொடுத்த வாக்கை பாஜக நிறைவேற்றவில்லை; மேடைகளில் புகைப்படம் கூட இல்லை!. சரத்குமார் ஆவேசம்!

    இந்தியர்களின் பாதுகாப்பு எங்களின் முதன்மைப் பொறுப்பு!. ஐக்கிய அரபு அமீரகம் உறுதி!.

    வரலாற்றில் முதல் முறை!. ரூ.94-ஐ தாண்டியது டாலர்!. அதிர்ச்சியில் இந்திய சந்தைகள்!.

    ஏப்.1 முதல் புதிய விதிமுறை!. பான் கார்டு பெற இனி ஆதார் மட்டும் போதாது!. இந்த கூடுதல் ஆவணங்கள் கட்டாயம்!

    குஜராத் முதல்வர் டூ பிரதமர் வரை!. 24 ஆண்டுகால இடைவிடாத ஆட்சிப் பயணம்!. மோடி புதிய சாதனை!

    Trending Posts

    பேரிடி!. நாளை முதல் விமான கட்டண உச்ச வரம்பு நீக்கம்!. பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்பு!

    March 22, 2026

    குஜராத் முதல்வர் டூ பிரதமர் வரை!. 24 ஆண்டுகால இடைவிடாத ஆட்சிப் பயணம்!. மோடி புதிய சாதனை!

    March 22, 2026

    துப்பாக்கி முனையில் மிரட்டல்?. 10 லட்சம் லஞ்சப் புகார்!. உயிரை மாய்த்துக்கொண்ட அதிகாரி!. பதவியை இழந்த அமைச்சர்!.

    March 22, 2026

    கரூர் பிரசாரத்தில் விஜய் ஷூட்டிங்கா?. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு!

    March 22, 2026

    ஏப்.1 முதல் புதிய விதிமுறை!. பான் கார்டு பெற இனி ஆதார் மட்டும் போதாது!. இந்த கூடுதல் ஆவணங்கள் கட்டாயம்!

    March 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.