கோள்களில் மிகவும் சக்திவாய்ந்த சூரியன் தான் உலகத்தை ஆள்வதாக OPS பேசியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் தொடர்ந்து திமுகவை பற்றி பெருமையாக பேசிய அவர், ‘உதயசூரியன்’ சின்னத்தைப் பாராட்டிப் பேசினார். அப்போது, ’பல லட்சம் கிமீ தொலைவில் உள்ள சூரியன் பக்கத்தில் சென்றால் என்ன ஆகும் தெரியுமா? பொசுங்கிவிடுவார்கள்’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “சூரியனால் தான் இந்த பூமியில் மனிதர்களும், பிற உயிரினங்களும் வாழ முடிகிறது. அந்த இயற்கை சக்தியை உணர்ந்துதான், பேரறிஞர் அண்ணா அவர்கள் திமுகவின் சின்னமாக உதயசூரியனை வைத்தார். அந்தச் சின்னத்திற்கு அத்தனை வலிமை இருக்கிறது” என திமுகவையும் அதன் சின்னத்தையும் வானளாவப் புகழ்ந்து தள்ளினார்.
