தமிழ்நாட்டில் திமுக ஆட்சி காலம் முடிவடைய உள்ளது. இந்தநிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மாதம் ஜனவரி 20 -ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி 24 -ம் தேதிவரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து  இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தநிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.

இதில், சுமார் 18 தொழில் நிறுவனங்களுக்கு விரிவாக்கம், முதலீடு, சலுகைகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசக்கபட்டு முக்கிய முடிவுகள் எடுக்கபடுகிறது. மேலும், இடைக்காலப் பட்ஜெட்டில் இடம் பெறும் புதிய திட்டங்கள், அதற்கான செலவுகள், ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்களுக்கான தொடர் செலவுகள், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ஆகியவை பற்றி ஆலோசிக்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version