சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் 131 ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தன்னுடைய வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்தவர் என்றும் அறநிலையத்துறைக்கு தனி சட்டத்தை இயற்றியவர் ஓமந்தூரார் என்றார்.
மேலும் பேசிய அவர், ஒன்றிய பட்ஜெட் அம்பானி அதானிக்கு பிரதமரின் கூட்டாளிகளுக்கான நிதிநிலை அறிக்கையாக இருக்கும் என்றும் தேசத்தின் பொருளாதாரம் அகல பாதாளத்திற்கு சென்றுவிட்டதாகவும் ஒன்றிய பட்ஜெட் ஏழை எளிய மக்களுக்கான நிதி நிலை அறிக்கையாக இருக்காது கூறினார்.
தேர்தல் வரை பெட்ரோல் டீசல் விலை உயர்வு இருக்காது அதன் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஒன்றிய அரசு உயர்த்தும் என பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 தோல்வியை தமிழ்நாட்டு மக்கள் கொடுத்து விட்டதாகவும் எடப்பாடி பழனிச்சாமி இடமிருந்து தமிழ்நாடு கைநழுவி போய்க்கொண்டிருக்கிறது எடப்பாடி பழனிச்சாமியின் பகல் கனவு பலிக்காது என்றார்.
காங்கிரஸ் கட்சி வலிமையாக இருப்பதால்தான் புதிய கட்சிகள் எங்களிடம் கூட்டணிக்கு வருகிறது என மேலிட பொறுப்பாளர் தெரிவித்தார். அதில் எந்த உள்நோக்கம் இல்லை என்றும் 2 அல்லது 3 நாட்களில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்
