Close Menu
    What's Hot

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் திருத்தேரோட்டம்..
    தமிழ்நாடு

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் திருத்தேரோட்டம்..

    Editor TN TalksBy Editor TN TalksJune 6, 2025Updated:June 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1889585 therottam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீசனிஸ்வர பகவான் ஆலயத்தில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் செண்பக தியாகராஜர், அம்பாள் உள்ளிட்ட 5தேர்களை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த மே 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மேலும் இந்த ஆலயத்தில் ஸ்ரீசனிஸ்வர பகவான் அனுக்ரஹ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    இக்கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீசெண்பக தியாகராஜர் நேற்று நள்ளிரவு யதாஸ்தானத்திலிருந்து உன்மத்த நடனமாடி ஆலய பிரகாரங்களை வலம் வந்து நள்ளிரவு திருத்தேருக்கு எழுந்தருளினார்.

    அதனை தொடர்ந்து அதிகாலை சிறப்பு பூஜைகளுடன் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீ செண்பக தியாகராஜர், ஸ்ரீ நீலோத்பலாம்பாள் மற்றும் ஸ்ரீசண்டிகேஸ்வரர் தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு கேரள பாரம்பரிய செண்டை மேளம் மற்றும் தமிழர் பாரம்பரிய வாத்தியங்களான தாரை தப்பட்டை மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்கவும் சிறப்பாக நடைபெற்றது.

    “நள்ளாறா தியாகேசா” என கோஷங்களுடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து அம்பாள் தேரையும் வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்ட விழாவில் நாகை, காரைக்கால், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருநள்ளாறில் குவிந்தனர். விழாவில் தருமபுர ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் , புதுச்சேரி மாநில அமைச்சர் சாய் சரவணன், சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர் சிவா மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா, ஆலய நிர்வாக அதிகாரி அருணகிரிநாதர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருதேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.

    வரும் 7ம் தேதி இரவு சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலாவும், நாளை மறுநாள் 8ம் தேதி இரவு தெப்போற்சவமும் நடைபெற உள்ளது.

    Karaikal temple event Shani Bhagavan pooja Shani Bhagavan Therottam Shani Peyarchi temple event Tamil Nadu car festival Shani temple Thirunallar car festival 2025 Thirunallar Shani Bhagavan ratham Thirunallar Shani temple Thirunallar temple festival news Thirunallar utsavam news
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமழை காரணமாக NEET தேர்வு ரத்து கோரிய வழக்குகள் தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம்
    Next Article ராஜ்யசபா தேர்தல் – கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல்
    Editor TN Talks

    Related Posts

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    December 26, 2025

    சமூகவலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    அதிமுகவில் டிச.31 வரை விருப்ப மனு அளிக்கலாம்! இபிஎஸ் அறிவிப்பு

    தேர்தல் நேரத்தில் கோயில், பக்தி ! திருமா. மீது குஷ்பு தாக்கு

    Trending Posts

    வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடா? ஜெயக்குமார் சொன்ன பதில் இதுதான்

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025

    இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.