விஜய்யின் தவெக கட்சியில் சங்கிகள் ஊடுருவி இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகர், அம்பேத்கர் திடலில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர் கூறியதாவது:
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பாஜகவிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவரது கட்சியில் சங்கிகள் ஊடுருவி இருப்பதாக விமர்சனங்கள் இருக்கிறது. மேலும் ஊடுருவல்கள் நிகழ்ந்தால் அவருடைய அரசியல் கேள்விக்குறியாகும். இனி எந்த அரசியல் கட்சியும் ரோடு ஷோ போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்பதே விசிகவின் நிலைப்பாடு.
அதிமுகவில் உள்ள செங்கோட்டையன் தவெகவில் இணைவதாக வரும் செய்திகள் எந்த அளவுக்கு உறுதியானது என்று தெரியவில்லை. அவர் தன்னிச்சையாக இந்த முடிவு எடுத்திருக்கிறாரா அல்லது இதற்கு பின்னால் ஏதேனும் அரசியல் சூழ்ச்சி இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
