2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதன்படி, ராணிப்பேட்டை தொகுதியில் கார்த்திகேயன், ஈரோடு மேற்கு தொகுதியில் யுவராஜா, ஒட்டன்சத்திரம் தொகுதியில் விடியல் சேகர், கும்பகோணம் தொகுதியில் அசோக்குமார் மற்றும் கிள்ளியூர் தொகுதியில் நிவின் சைமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனது தனித்துவமான ‘சைக்கிள்’ சின்னத்திற்குப் பதிலாக, பாஜகவின் ‘தாமரை’ சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. சின்னம் தொடர்பான சட்ட சிக்கல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜி.கே.வாசன் விளக்கம் அளித்துள்ளார். அதிமுக தலைமையிலான இந்த மெகா கூட்டணியில் தமாகா வேட்பாளர்கள் தாமரை சின்னத்தில் களம் காண்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
