Close Menu
    What's Hot

    விஜய் அடுத்த மூவ்!. வரும் 23ஆம் தேதி வேலூரில் பரப்புரை!. ஏற்பாடுகள் தீவிரம்!.

    ”இதுதான் வளர்ச்சி!. தமிழ்நாடு தான் இந்தியாவுக்கான மாடல்”!. முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

    இடைக்கால வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சொத்தை பழம் போல் இன்றைய பட்ஜெட்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.
    தமிழ்நாடு

    சொத்தை பழம் போல் இன்றைய பட்ஜெட்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    Editor web3By Editor web3February 17, 2026Updated:February 17, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நிதிநிலை அறிக்கையானது வார்த்தை ஜாலங்கள் நிறைந்த துறையாக தான் இருக்கிறது என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார்.  பட்ஜெட் உரையின்போது அமைச்சர் தங்கம் தென்னரசு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 2மணி நேரத்திற்கும் மேலாக வாசித்தும் இந்த  பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

    அந்தவகையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”5 ஆண்டாக மக்களை வாட்டி வதைத் திராவிட மாடல் என்கிற ஏமாற்ற மாடல் திமுக அரசு தனது பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இந்த அரசு எந்த ளவிற்கு மக்களுக்கு காது குத்துகிறது என்பதை நாட்டு மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக இந்த அழைப்பிதழை உங்களிடம் கொடுத்திருக்கிறோம்.

    2021 ல் திமுக சட்டமன்றத் தேர்தலின் போது 535 வாக்குறுதிகள் கொடுத்தார்கள். அதில் பெருமளவு நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்களையும் இந்த அரசு ஏமாற்றி உள்ளது. பலதுறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பல்வேறு உறுதிமொழிகளை அளித்தார்கள். எதையும் நிறைவேற்றவில்லை. எல்லோரும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழகம் போராட்டக் களமாக மாறி இருக்கிறது.

    கடந்த ஐந்து ஆண்டு போல இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மேனா மினுக்கே துறையாக தான் இருக்கிறது தவிர உருப்படியாக எதுவும் இல்லை. 2025-26 வரி வருவாய் 2.35 லட்சம் என குறைந்துள்ளது. 15 ஆயிரம் கோடி வருவாய் குறைந்ததற்கான காரணத்தை நிதி அமைச்சர் விளக்கவில்லை.

    ஸ்டாலின் ஆட்சி வந்தவுடன் ரகுராமன் ராஜா தலைமையில் நிதி மேலாண்மை குழு அமைத்து மாநில நிதிநிலை சீர் செய்யப்படும் என்று சொன்னார்கள். நிபுணர் குழு அமைத்த பிறகுதான் அதிக கடன் வாங்கி இருக்கிறார்கள். வரவு செலவு பற்றி உருப்படியாக எதுவும் இல்லை.

    வேளாண் பட்ஜெட் என்று விவசாயிகள் ஏமாற்றும் வகையில் ஒரு பட்ஜெட்டை போட்டிருக்கிறார்கள். பால்வளத்துறை விவசாயத்துறை மீன்வளத்துறை கால்நடை துறை பல துறைகளுக்கு

    விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட் தான் வேளாண் பட்ஜெட். அத்திப்பழம் வெளியே அழகாக இருக்கும். உற்றுப் பார்த்தால் உள்ளே சொத்தையாக இருக்கும் என்பதற்கு உதாரணமாக தான் இந்த நிதிநிலை அறிக்கை இருக்கிறது” என்றார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇடைக்கால பட்ஜெட்டை 2 மணிநேரம் 22 நிமிடம் வாசித்த தங்கம் தென்னரசு!.
    Next Article இடைக்கால வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன?
    Editor web3
    • Website

    Related Posts

    விஜய் அடுத்த மூவ்!. வரும் 23ஆம் தேதி வேலூரில் பரப்புரை!. ஏற்பாடுகள் தீவிரம்!.

    February 17, 2026

    ”இதுதான் வளர்ச்சி!. தமிழ்நாடு தான் இந்தியாவுக்கான மாடல்”!. முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

    February 17, 2026

    இடைக்கால வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன?

    February 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜய் அடுத்த மூவ்!. வரும் 23ஆம் தேதி வேலூரில் பரப்புரை!. ஏற்பாடுகள் தீவிரம்!.

    ”இதுதான் வளர்ச்சி!. தமிழ்நாடு தான் இந்தியாவுக்கான மாடல்”!. முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

    இடைக்கால வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன?

    சொத்தை பழம் போல் இன்றைய பட்ஜெட்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    இடைக்கால பட்ஜெட்டை 2 மணிநேரம் 22 நிமிடம் வாசித்த தங்கம் தென்னரசு!.

    Trending Posts

    மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி; எரிசக்தித்துறைக்கு ரூ.18,301 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    ஜிஎஸ்டியால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும்!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    காங்கிரஸ் தலைவராக ஈராண்டுகள் நிறைவு..! செல்வப்பெருந்தகை செய்தது என்ன?

    February 17, 2026

    விஜய் அடுத்த மூவ்!. வரும் 23ஆம் தேதி வேலூரில் பரப்புரை!. ஏற்பாடுகள் தீவிரம்!.

    February 17, 2026

    இடைக்கால பட்ஜெட்டை 2 மணிநேரம் 22 நிமிடம் வாசித்த தங்கம் தென்னரசு!.

    February 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.