Close Menu
    What's Hot

    இளைஞர்களே நோட்!. சென்னையில் ஆப்பிள் புதிய அலுவலகம்!. ஆட்சேர்ப்பு பணிகள் தொடக்கம்!

    மகளிர் டி20!. 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

    காவி சிந்தனையில் எடப்பாடி பழனிசாமி!. செல்வபெருந்தகை கண்டனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருச்சியில் காவலர் குடியிருப்புக்குள் புகுந்து இளைஞர் வெட்டிப் படுகொலை
    தமிழ்நாடு

    திருச்சியில் காவலர் குடியிருப்புக்குள் புகுந்து இளைஞர் வெட்டிப் படுகொலை

    Editor TN TalksBy Editor TN TalksNovember 10, 2025Updated:November 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    trichy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருச்சியில் இளைஞர் ஒருவர் காவலர் குடியிருப்புக்குள் ஓடஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் தங்கியுள்ள சூழலில் இந்தப் படுகொலை நிகழ்ந்துள்ளது.

    திருச்சி பீமநகர், செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவை சேர்ந்தவர் தாமரைச் செல்வன் (25). கண்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார் மோட்டார் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.

    இந்நிலையில் இன்று காலை சுமார் 8.20 மணி அளவில் வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை வழியாக வந்து அவரை ஐந்து பேர் கும்பல் அரிவாளுடன் வெட்ட துரத்தியது. அப்போது அவர்களிடமிருந்து தப்பித்து செல்ல முயன்றார். அவரை துரத்திச் சென்ற கும்பல் பீமா நகர் காவலர் குடியிருப்பு வாசலில் அவரை மறித்து வெட்டியது.

    வெட்டுப்பட்ட தாமரைச் செல்வன் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு காவலர் குடியிருப்புக்குள் உள்ளே ஓடினார். ஏ பிளாக்கில் தில்லைநகர் எஸ்.எஸ்.ஐ செல்வராஜ் வீட்டுக்குள் ஓடினார். அவரைப் பின் தொடர்ந்து ஓடிய கும்பல் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக வெட்டியது. இதில் தாமரைச் செல்வனின் தலை துண்டானது.

    வீட்டுக்குள் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்த எஸ்எஸ்ஐ செல்வராஜ் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. அப்போது காவலர் குடியிருப்பில் வசிக்கும் பிற போலீசார் அந்த கும்பலை துரத்தி சென்றதில் ஒருவன் சிக்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கரை இன்ஸ்பெக்டர் பேசில் பிரேம் ஆனந்த் மற்றும் போலீஸார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    கோட்டை உதவி ஆணையர் சீதாராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். போலி சார் விசாரணையில் பிடிபட்டவர் இளமாறன் என தெரியவருகிறது.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என தெரிய வருகிறது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள சுற்றுலா மாளிகையில் தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் தங்கி உள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் தங்கியுள்ள நிலையில் காவலர் குடியிருப்புக்குள் புகுந்து இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    trichy#murder
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகள்ள ஓட்டு போட முடியாது என்பதால்தான் திமுக எஸ்ஐஆரை எதிர்க்கிறது: எடப்பாடி பழனிசாமி
    Next Article நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தங்கம் விலை அதிரடி உயர்வு
    Editor TN Talks

    Related Posts

    இளைஞர்களே நோட்!. சென்னையில் ஆப்பிள் புதிய அலுவலகம்!. ஆட்சேர்ப்பு பணிகள் தொடக்கம்!

    February 21, 2026

    மகளிர் டி20!. 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

    February 21, 2026

    காவி சிந்தனையில் எடப்பாடி பழனிசாமி!. செல்வபெருந்தகை கண்டனம்!

    February 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இளைஞர்களே நோட்!. சென்னையில் ஆப்பிள் புதிய அலுவலகம்!. ஆட்சேர்ப்பு பணிகள் தொடக்கம்!

    மகளிர் டி20!. 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

    காவி சிந்தனையில் எடப்பாடி பழனிசாமி!. செல்வபெருந்தகை கண்டனம்!

    மெகா மூவ்!. திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 சீட்கள் உறுதி?.

    இந்தியா – பிரேசில் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!. பிரதமர் மோடி புகழாரம்!.

    Trending Posts

    அரசியலில் ‘ராதிகா’ எஃபெக்ட்!. OG தாய் கிழவி; யாருக்குப் பொருத்தம்? நிர்மலா VS சோனியா காந்தி!

    February 20, 2026

    மகளிர் டி20!. 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

    February 21, 2026

    ஒரேயொரு தொகுதியில் டெபாசிட் பெற்ற நாதக!. சீமான் போடும் பிளான்!. 

    February 21, 2026

    உலக தாய்மொழி தினம்!. ‘தமிழே நீ வாழ்ந்திடு’!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

    February 21, 2026

    குறைந்த வேகத்தில் எகிறிய தங்கம்!. ஒரு சவரன் ரூ.2,080 உயர்வு!. இன்றைய ரேட் இதோ!

    February 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.