காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சிக்குட்பட்ட ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை அளித்தனர்.

 

முகாமில் பெறப்பட்ட மனுக்களை அனைத்துத் துறை அதிகாரிகளும் உடனடியாக ஆய்வு செய்து தீர்வு கண்டு வருகின்றனர். இந்த முகாமிற்கு தலைமை தாங்கிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி மூலம் முகாம் எவ்வாறு நடைபெறுகிறது, மக்களிடையே வரவேற்பு எப்படி உள்ளது, பெறப்படும் மனுக்களுக்கு எவ்வாறு தீர்வு காணப்படுகிறது, மற்றும் ஏற்பாடுகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.

 

காணொலிக் காட்சி வாயிலாக முகாமின் செயல்பாடுகளைப் பார்வையிட்ட முதல்வர், அங்கிருந்த பொதுமக்களுடனும் நேரடியாகப் பேசி அவர்களின் குறைகளையும், அரசின் திட்டங்கள் குறித்த கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

 

“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் மிகுந்த பயனுள்ளதாக இருப்பதாக பொதுமக்கள் காணொலிக் காட்சி மூலம் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். முதலமைச்சர் தொலைபேசி மூலம் காணொலிக் காட்சியில் பேசியது, முகாமில் கூடியிருந்த பொதுமக்கள் அனைவரிடமும் பெரும் நெகிழ்ச்சியையும், வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version