கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்றுக் கொள்ள இன்னும் அறிவியல்பூர்வமான தரவுகள் தேவைப்படுகின்றன என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இரண்டு நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார். இந்நிலையில், இன்னும் என்ன தரவுகள் வேண்டும் என்று கவிதை வடிவில் வைரமுத்து கேள்வி எழுப்பி உள்ளார். ராமர் என்ற தொன்மத்தை ஏற்றுக் கொள்ளும் மத்திய அரசு, கீழடி என்ற தொன்மையை ஏற்க மறுப்பது ஏன் என்றும் அவர் வினவியுள்ளார். அவரது ஆங்கார கவிதை இதோ..
ஒன்றிய அமைச்சர்
ஷெகாவத் அவர்கள்
கீழடித் தொன்மையை மெய்ப்பிக்க
இன்னும் அறிவியல் தரவுகள்
தேவையென்று சொல்லித்
தமிழர் பெருமைகளைத்
தள்ளி வைக்கிறார்
ஒரு தமிழ்க் குடிமகனாக
அமைச்சர் அவர்களுக்கு
எங்கள் அறிவின் வலியைப்
புலப்படுத்துகிறேன்
கீழடியின் தொன்மைக்கான
கரிமச் சோதனைகள்
இந்தியச் சோதனைச் சாலையில்
முடிவு செய்யப்பட்டவை அல்ல;
அமெரிக்காவில் ஃபுளோரிடாவின்
நடுநிலையான
சோதனைச் சாலையில்
சோதித்து முடிவறியப்பட்டவை
அதனினும் சிறந்த
அறிவியல் தரவு என்று
அமைச்சர் எதனைக் கருதுகிறார்?
சில தரவுகள்
அறிவியலின்பாற் பட்டவை;
சில தரவுகள்
நம்பிக்கையின்பாற் பட்டவை
ராமர் என்பது ஒரு தொன்மம்
அதற்கு அறிவியல்
ஆதாரங்கள் இல்லை;
நம்பிக்கையே அடிப்படை
கீழடியின் தொன்மை என்பதற்கு
அறிவியலே அடிப்படை
ராமரின் தொன்மத்தை
ஏற்றுக்கொண்டவர்கள்
கீழடியின் தொன்மையை
ஏற்றுக்கொள்ளாதது
என்ன நியாயம்?
தொன்மத்துக்கு ஒரு நீதி
தொன்மைக்கு ஒரு நீதியா?
தமிழர்களின் நெஞ்சம்
கொதிநிலையில் இருக்கிறது
தமிழ் இனத்தின் தொன்மையை
இந்தியாவின் தொன்மையென்று
கொண்டாடிக் கொள்வதிலும்
எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை
“தொன்று நிகழ்ந்த
தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் – இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம் எங்கள் தாய்”
என்ற பாரதியார் பாட்டு
எங்கள் முதல் சான்றாக முன்நிற்கிறது
மேலும் பல தரவுகள்
சொல்வதற்கு உள்ளன
விரிக்கின் பெருகுமென்று
அஞ்சி விடுக்கிறோம்
அங்கீகார அறிவிப்பை
விரைவில் வெளியிட வேண்டுகிறோம்
[10:44 am, 12/6/2025] News J Aravind Sir: மேட்டூர் அணை- பாசனத்திற்காக நீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுபடிக்காக சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து நீரினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு 114.910 அடியாகவும் நீர் இருப்பு 85.583 டி.எம்.சி. ஆக உள்ளது.
குறுவை பாசனம்
காவிரி டெல்டா குறுவை பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து ஜுன் 12 முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை 5,22,000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 138.52 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படுகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகா அணைகளிலிருந்து மாதந்தோரும் விடுவிக்கப்படும் நீரினை கருத்தில் கொண்டும் மேட்டூர் அணையில் இருந்து 125.68 டி.எம்.சி தண்ணீர் வழங்கியும், மீதமுள்ள 12.84 டி.எம்.சி தண்ணீரானது மழை மற்றும் நிலத்தடி நீர் மூலமாகவும் பூர்த்தி செய்யப்படும்.
குறுவை பாசனம் நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களில் 4,91,200 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 118.17 டி.எம்.சி தண்ணீரும், கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்திற்கு 30,800 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 7.51 டி.எம்.சி தண்ணீரும் மேட்டூர் அணையிலிருந்து தேவைப்படுகிறது.
தற்போது மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு இன்று காலை வினாடிக்கு 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு, இன்று மாலைக்குள் படிப்படியாக வினாடிக்கு 10,000 கனஅடியாக உயர்த்தப்படும். மேலும், குறுவை சாகுபடி தேவைக்கேற்ப இந்த அளவு உயர்த்தி வழங்கப்படும்.
சம்பா மற்றும் தாளடி பாசனம்
மேட்டூர் அணையிலிருந்து சம்பா மற்றும் தாளடி பாசனத்திற்கு, செப்டம்பர் 15 முதல் ஜனவரி 28 வரை 12,10,000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 268.47 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும். இதற்கு அணையிலிருந்து தண்ணீர் வழங்கியும், மீதமுள்ள தண்ணீர் வடகிழக்கு பருவமழை மற்றும் நிலத்தடி நீர் கொண்டும் பூர்த்தி செய்யப்படும். மேட்டூர் அணையின் கீழ் பகுதியில் ஆற்றில் இருந்து சுமார் 155 குடிநீர் திட்டங்களின் மூலம் தினசரி 1707.63 மில்லியன் லிட்டர் தண்ணீர் 18 மாவட்டங்களில் உள்ள பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக ஆண்டு முழுவதும் எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 40-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கும் மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்கும் தண்ணீர் திறந்துவிடப்படும் பொழுது அணை மின்நிலையம் மூலம் 50 மெகாவாட் மின்சாரமும் மற்றும் சுரங்க மின்நிலையம் மூலம் 200 மெகாவாட் மின்சாரமும், என மொத்தம் 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணையின் கீழ்பகுதியில் 30 மெகாவாட் வீதம் 7 கதவணை நீர்மின் நிலையங்கள் மூலம் மொத்தம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேட்டூர் அணை கட்டப்பட்ட நாள் முதல் குறுவை சாகுபடிக்கு 20-வது முறையாக பாசன விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட ஜுன்-12 அன்று காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பாசன தேவையை பொறுத்து அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் அளவினை உயர்த்தியும் குறைத்தும் வழங்கப்படும்.
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும், நீர்பங்கீட்டில் நிலைமைக்கேற்ப தண்ணீரை முறைவைத்துப் பயன்படுத்த நீர்வளத்துறை அலுவலர்களுடன் ஒத்துழைக்குமாறும், மிக அதிக அளவு மகசூல் பெற்று பயனடையுமாறும் முதலமைச்சர் விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், இரா. ராஜேந்திரன், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மா. மதிவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.