சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், விஜய் வரும் 13ம் தேதி சேலத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு தவெக மாவட்ட செயலாளர் அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழக அரசியல் களம் சூடி பிடித்துள்ளது.  மீண்டும் தனது அரசியல் பயணத்தை வேகப்படுத்த தொடங்கியுள்ள விஜய்க்கு, செங்கோட்டையனின் வருகை பலமாக இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். கொங்கு மண்டலத்தில் தவெக-வின் முக்கிய முகமாக தற்போது செங்கோட்டையன் மாறியுள்ளார். தவெக-வில் இணைந்த பிறகு கடந்த ஈரோட்டில் கடந்த டிச.18ம் தேதி மாநாட்டை வெற்றி கரமாக நடத்தி முடித்தார் விஜய். இது கொங்கு மண்டலத்தில் விஜய்யின் தாக்கமாகவே பார்க்கப்பட்டது.

அடுத்தப்படியாக, சேலத்தில் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். அந்தவகையில் வரும் 13ம் தேதி சேலத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இந்த நிலையில் இந்த கூட்டத்திற்கு அனுமதி கேட்டு சேலம் மாவட்ட செயலாளர் பார்த்திபன் கடிதம் வழங்கினார். கடந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா பரப்புரை பொதுக்கூட்டம் நடத்திய இடத்தில் விஜய் கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version