தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட மாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் தெற்கு ரோட்டரி அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழக வெற்றி கழகத்தின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பங்கேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் . அப்போது பேசிய அவர், வெற்றி நாயகன் தளபதியை யாராலும் வெல்ல முடியாது. தமிழகத்தை ஆளப்போகும் தலைவனை, வெற்றிக் கழகத்தை வெல்ல எவராலும் வீழ்த்த முடியாது. 234 தொகுதியில் தவெக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தேவையற்ற விமர்சனம் செய்கிறார்கள் அவர்களைப் பற்றி நாங்கள் பேசினால் நீங்களும் கேட்பீர்கள் எங்கள் லட்சியம் வேறு. வெற்றி இலக்கை நோக்கி செல்கிறோமே தவிர டெபாசிட்டை இழக்க அல்ல. தேர்தல் பயம் காரணமாக பொங்கல் பரிசு அறிவிப்புகள் குறித்து தகவல் வருகிறது. தலைவர் விஜய் நல்லதுக்கு தான் வாய் திறப்பார். கவலைப்பட தேவையில்லை . இனி தலைவரின் பயணம் வரலாறு படைப்பதாக இருக்கும் என்றார்
மேலும், தளபதி என்றால் படைக்கு தளபதியாவது; வெற்றி தளபதி என்றால் வெற்றி பெற்று நாட்டை ஆள்வது” என கூறிய செங்கோட்டையன், விஜய் தான் உண்மையான தளபதி மற்றவர்களெல்லாம் வெட்டி தளபதி என்றும் விமர்சித்தார்.
